அந்த ஹீரோ, நைட் கால் பண்ணி ரூம்க்கு வர சொல்லி - சினிமாவில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கிரண்

By subhashini · 25/2/2024

கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வது குறித்து நடிகை கிரண் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் இவர் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான். அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண். ஆனால், அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களில் கிரண் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

கிரண் திரைப்பயணம்:

தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார். இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தன கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். மேலும், இவர் தனது பெயரில் சொந்தமாக ஆண்ட்ராய்டு app ஒன்றை துவங்கி அதில் தனது கவர்ச்சியான புகைப்பங்களை போட்டு அதில் சம்பாதித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=TX7PbCkpWXw

கிரண் பேட்டி :

அதில் பதிவிடும் சில புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் கிரன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தேன். அவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எல்லாம் நினைத்தேன். ஆனால், என்னுடைய காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் நான் ரொம்பவே மனமடைந்து விட்டேன். அதோடு சில காலம் சினிமாவில் இருந்தும் நான் காணாமல் போனதற்கு இதுதான் காரணம்.

காதல் தோல்வி குறித்து சொன்னது:

மேலும், சினிமாவில் நான் நண்பர்கள் என்று கூறிய எல்லோருமே உண்மையான அக்கறை இருப்பது போல நடந்து கொண்டார்கள். பின் நல்ல கதாபாத்திரங்களில் உங்களை நடிக்க வைக்கிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அவர்கள் பேசிய அன்று இரவே போன் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். இந்த சினிமா துறையில் யாருமே நண்பர்கள் இல்லை என்று அப்போதுதான் எனக்கு புரிந்தது. நான் ஆப்பை தொடங்கி அதில் என்னுடைய கிளாமர் புகைப்படம் வீடியோக்களை எல்லாம் பதிவு செய்தேன். அதை பார்த்து தயாரிப்பாளர், இயக்குனர்கள் எல்லோருமே என்னை படுக்க கூப்பிட்டார்கள்.

கவர்ச்சி புகைப்படங்கள் குறித்து சொன்னது:

நிறைய பேர் என்னை அழைத்திருக்கிறார்கள். நான் மட்டுமா கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறேன்? கிட்டத்தட்ட எல்லா நடிகைகளையும் இப்படித்தான் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். நான் மட்டும் போட்டால் மொத்த மீடியாவும் என்னை டார்கெட் செய்கிறார்கள். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு பிடித்த உடைகளை உடுத்தி நான் போட்டோக்களை பதிவிடுகிறேன். நான் ஒன்னும் ஆபாச படத்தில் நடிக்கவில்லை. கவர்ச்சி போட்டோ போட்டால் படுக்க அழைப்பார்களா? என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full