ஷகீலாவின் புதிய படம் - பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஷகீலா. ட்ரைலரை பாருங்க புரியும்.
சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=TWCd4QpXmzE
இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார்.
இதையும் பாருங்க : கறுப்பர் கூட்டத்தின் 500 வீடியோக்கள் க்ளோஸ் - கந்தனுக்கு அரோகரா என்று ரஜினி போட்ட ட்வீட்.
இதனாலே ஷகிலா படங்களுக்கு திருவிழா போன்று கூட்டம் கூடும். சகிலா படம் ரிலீசாகும் என்றால் அங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்கள் கூட ஓடாது. அந்த அளவிற்கு சகிலா கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். மேலும், இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் இவர் படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இவர் 'லேடீஸ் நாட் அளவ்வுட் ' என்ற படத்தை தயாரிப்பித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=Ib3hj0eUgqk
இந்தப் படம் கடந்த 20ஆம் தேதி www.ladiesnotallowed.com என்ற இணையதளத்தில் வெளியானது. இந்த படம் குறித்து பேசி உள்ள ஷகிலா, இந்த படத்திற்காக நான் நிறைய பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், மேலும் இந்த படத்தை ஆண்கள் மட்டும் பாருங்கள் பெண்கள் இந்த படத்தை பார்க்காதீர்கள். காரணம் இந்த படத்தில் நிறைய அடல்ட் கன்டன்ட் இருப்பதாக கூறியிருக்கிறார் ஷகிலா.