மதன் கௌரி வீடீயோவ பாக்கறதுக்கு இத பாருங்க - மேடையில் ஷகிலாவின் நச் பேச்சு.

By Rajkumar · 20/9/2021

யூடியூப் பலருக்கு பொழுது போக்கு தளமாக இருந்தாலும் சில பேருக்கு வருமானம் ஈட்டும் தளமாக அமைந்து வருகிறது. மேலும், யூட்யூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பல பேர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் மதன் கௌரி. இவர் யாரும் அறியாத பல சுவாரசியமான தகவலை வீடியோவாக வெளியிட்டு வருவதன் மூலமாகவே மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை நமக்கு புரியும் வகையில் எளிதாக தமிழில் இவர் சொல்கிறார்.

https://www.youtube.com/watch?v=dUrLeHLFA_k

அது மட்டுமில்லாமல் இந்தியாவில் நிலவும் பல சமூகப் பிரச்சினைகளையும் இவர் முன் வைக்கிறார். மேலும், மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு அதன்படி வீடியோக்கள் போடுவதனால் தான் இவர் அசால்டாக பிரபலமானார் என்றுகூடச் சொல்லலாம். தற்போது இவர் ஒரு மாதத்திற்கு இலட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகை சகிலா அவர்கள் மதன் கௌரி குறித்து கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் 5 துவங்கும் தேதி மற்றும் நேரம் - புதிய ப்ரோமோவோடு வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.

சமீபத்தில் நடிகை சகிலா அவர்கள் உச்சம் படத்திற்கான ஆடிஷன் விழாவிற்கு சென்று இருந்தார். அப்போது அதில் அவர் கூறி இருப்பது, உச்சம் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கு மிச்சம். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. சமுதாயத்தில் நிலவும் பல கொடுமைகளை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ரேப்பிஸ்ட்களுக்கு பல வெளிநாடுகளில் கொடுமையான முறையில் தண்டனை கொடுக்கிறார்கள். நான் கூட நிறைய பேட்டிகளில் இதற்கான தண்டனை குறித்து பேசி இருக்கேன்.

இந்த படம் அதைப் பற்றி அருமையாக சொல்லி இருக்கிறது. யூடியூபில் மதன் கௌரி போன்ற பல பிரபலங்கள் சொல்வதை விட்டுவிட்டு படத்தை பார்த்தால் இன்னும் நன்றாக புரியும். மதன் கௌரி, அந்த கௌரி, இந்த கௌரி என்று சொல்வதை கேட்பதை விட்டுவிட்டு இதோ போன்ற படத்தை பாருங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full