விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'சக்தி திருமகன்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சக்தி திருமகன். இந்த படத்தை இயக்குனர் அருண்பிரபு தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வாகை சந்திரசேகர், கண்ணன், ரியா ஜிது, ஷோபா விஸ்வநாத், பிரசாந்த் பார்த்தீபன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசை அமைத்திருக்கிறார். அதோடு இந்த படத்தை விஜய் ஆண்டனி உடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் விஜய் ஆண்டனி ஒரு செக்ரடரி ஆபீசில் ஒரு சின்ன வேலை செய்கிறார். அதாவது டீ வாங்கி தருவது போன்ற வேலை தான் செய்கிறார். இருந்தாலும் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழகத்தில் கவர்மெண்ட், அரசியல் யாருக்கு எது வேண்டுமானாலும் ஒரு போன் காலிலேயே முடித்து அதற்கான கமிஷனையும் எடுத்துக் கொள்கிறார் விஜய் ஆண்டனி. அதை வைத்து இவர் 6000 கோடிகளுக்கு மேல் சம்பாதித்து இருக்கிறார்.
இப்படி இருக்கும் போது ஒரு நாள் மத்திய அமைச்சர் ஒருவரிடம் விஜய் ஆண்டனி சிக்கி கொள்கிறார். அதைத்தொடர்ந்து அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் ஒருவரிடம் விஜய் ஆண்டனி சிக்கி தவிக்கிறார். அனைத்து தரப்பும் விஜய் ஆண்டனியை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். இதிலிருந்து விஜய் ஆண்டனி எப்படி நீண்டார்? விஜய் ஆண்டனி இப்படி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கான காரணம் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் விஜய் ஆண்டனி வழக்கம் போல தன்னுடைய நிதானமான நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் பாதி முழுவதுமே அரசியல் களம் சூடு பிடிக்கிறது. ஒரு மீடியேட்டர், பெரிய பெரிய எம்பி, எம்எல்ஏ கூட முடியாத விஷயத்தை விஜய் ஆண்டனி செய்து முடிப்பது பிரம்மிப்பாக இருக்கிறது. ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை தங்களுக்கு ஒருவேளை என்றால் மீடியட்டர்கள் எந்த அளவிற்கு பயன்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கான ராஜதந்திரத்தையும் இந்த படத்தில் இயக்குனர் தெளிவாக காண்பித்து இருக்கிறார்.
தற்போதைய காலகட்டத்தில் வரும் அரசியல் பிரபலங்கள், அரசியல் நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த படத்தில் சுட்டிக்காட்டிருப்பது பார்வையாளர்களுக்கு கனெக்ட் செய்யும் வகையில் இருக்கிறது. ஆனால், படத்தை பரப்பரப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று இயக்குனர் செய்திருக்கும் சில வேலைகள் தான் சுதப்பி இருக்கிறது. ஆழமான அரசியல் புரியாதவர்களுக்கு அந்த காட்சிகள் எல்லாம் கொஞ்சம் குழப்பம்தான்.
இரண்டாம் பாதியை சுவாரசியமாக கொடுக்க இயக்குனர் செய்திருக்கும் வேலை தான் செட்டாகவில்லை. அதோடு விஜய் ஆண்டனி உடைய லாஜிக் மிரல்களுமே ரொம்ப ஓவராக தான் இருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதியை தெருக்கோடியில் இருக்கும் ஒரு நபர் ஆட்டி படைப்பது எல்லாம் பெரிய லாஜிக் மீறல் தான். இருந்தாலும் டெக்னிக்கல், பின்னணி இசை படத்திற்கு சப்போர்ட்டாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.
நிறை:
விஜய் ஆண்டனி நடிப்பு
படத்தின் முதல் பாதி அருமை
நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்க்கு பக்கபலம்
கதைக்களம் ஓகே
குறை:
படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள்
இரண்டாம் பாதியை சுவாரசியமாக கொடுத்திருக்கலாம்
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
சில இடங்களில் அரைத்த மாவையே இயக்குனர் அரைத்து இருக்கிறார்
கதைக்களம் கொண்டு சென்ற விதத்திலும் நிறைய கவனம் செலுத்திருக்கலாம்
மொத்தத்தில் சக்தி திருமகன் - அரசியல் ஆட்டம்