ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர்.

வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு சேனலும் சீரியல்,நிகழ்ச்சிகள் என மீண்டும் தூசு தட்டி மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்தியாவே ஒட்டுமொத்தமாக லாக் டவுனில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு டிவி சேனல்களும் தூசுதட்டி தங்களுடைய பழைய சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று சொன்னவுடன் மக்கள் அனைவரும் குஷியாகி விட்டார்கள்.

Advertisement

இருப்பினும் சில ரசிகர்கள் சக்திமான் சீரியல் திரும்ப மறு ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக திகழ்ந்தது சக்திமான். இந்த சீரியலில் ஹீரோவாக முகேஷ் கண்ணா நடித்திருந்தார். அநீதியைக்கண்டு பொங்கி எழும் சக்திமானாக உருப்பெற்று தீயவற்றை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளால் பெரும் வரவேற்பை பெற்றது. சக்திமான் சீரியல் மீண்டும் டிவியில் மறு ஒளிபரப்பு செய்யவேண்டுமென 130 கோடி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் மீண்டும் சக்திமான் சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும் என்று சக்திமான் சீரியல் ஹீரோ முகேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, சக்திமான் சீரியலுக்கு மக்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. இந்த சீரியல் கூடிய விரைவில் மீண்டும் ஒளிபரப்பப்படும். கடந்த 3 ஆண்டுகளாக சக்திமான் இரண்டாம் பாகம் வெளியிட நாங்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம்.

Advertisement

அதன் வேலைகளில் நாங்கள் அதிகம் ஈடுபட்டுள்ளோம். ஆனால், கொரோனா வைரஸின் நெருக்கடி காரணமாக தற்போது இந்த பணிகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டாம்பாகத்தில் சக்திமானுக்கு சக்தி எப்படி வந்தது என்பது இருக்கும். கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார்.

Advertisement

சக்திமான் தொடரின் இரண்டாம் பாகத்திற்காக முகேஷ் கண்ணா தனது உடல் எடையில் 8 கிலோ வரை குறைத்து உள்ளதாக தெரிவித்தார். சக்திமான் ஆடைகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2011 ஆம் ஆண்டு சக்திமான் அனிமேஷன் தொடர் வந்தது. 2013 ஆம் ஆண்டு சக்திமான் படம் வெளிவந்தது. ஆனால், 90 களில் வெளியான சக்திமான் தொடரை தான் மக்கள் வெளிவர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement