அட்டர் பிளாப் ஆன சமந்தாவின் சாகுந்தலம் படத்துக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கிடைத்த மிக உயரிய விருது

By Arun · 30/5/2023

அட்டர் பிளாப் ஆன சமந்தாவின் சாகுந்தலம் படத்திற்கு உயரிய விருது கிடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பின் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ், மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருக்கிறார்.

சாகுந்தலம் படம்:

மேலும், சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. ஆனால், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி. ஆனால், இந்த படம் மொத்தமாகவே 10 கோடி தான் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தினால் 25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

படம் குறித்த விமர்சனம்:

மேலும், இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில்ராஜு தயாரித்திருக்கிறார். இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் படத்தின் ரிலீஸ் உரிமைகளையும் வாங்கி இருந்தார். சாகுந்தலம் படம் மிகப்பெரிய அளவில் தோல்வி சந்தித்தது பலருக்குமே அதிர்ச்சி. இதனால் படக்குழு பயங்கரமாக வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. அதோடு தன்னுடைய கேரியரிலேயே சாகுந்தலம் படம் மிக பெரிய தோல்வி என்று தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி அளித்து இருக்கிறார்.

சாகுந்தலம் படத்திற்கு விருது:

இந்த நிலையில் சாகுந்தலம் படத்திற்கு உயரிய விருது கிடைத்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, அதாவது சமீபத்தில் கேன்ஸ் திரைப்படம் விருது விழா நடைபெற்றது. அதில் சாகுந்தலம் படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நீதா லுல்லாவிற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது கிடைத்தது. இது தோல்வியால் மன வேதனை அடைந்த சாகுந்தலம் பட குழுவினருக்கு இந்த விருது ஆறுதலை கொடுத்திருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full