உங்கள் கேரியரை மட்டும் பார்க்காமல் பலரின் வாழ்க்கையை மாற்றியிருகிறீர்கள் - நெகிழ்ச்சியில் ஷாலினி

By subhashini · 5/8/2025

நடிகர் அஜித் குறித்து நெகழ்ச்சியில் நடிகை ஷாலினி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்தது.

இதை அடுத்து அஜித் அவர்கள் சினிமா, கார் ரேஸ் என்று பிசியாக இருக்கிறார். மேலும், சினிமாவில் நுழைந்து 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஜித் அவர்கள் சில தினங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல் தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன்.

அஜித் அறிக்கை:

மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது மன்னிக்காது. அதற்கு தேவை Respect Focus & Grill அந்த டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. என்னை பலமுறை தூக்கி எறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன். “அஜித்குமார் மோட்டார் ரேசிங்" என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான் நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.

சினிமா பற்றி சொன்னது:

சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள். சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள் விமர்சர்கள் அனைவருக்கும் நன்றி! பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி மேடம் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=Z-ILjs3TuJM

நன்றி சொன்ன அஜித்:

என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள். சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ்.மணி மற்றும் என் அம்மா மோகினி மணி. என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன் என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். வாழு வாழ விடு என்று கூறி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

ஷாலினி பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அவர்கள் நெகழ்ச்சியில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். தன் கணவருடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் அவர், நீங்கள் உங்கள் கேரியரை மட்டும் வளர்த்துக் கொள்ளவில்லை. பலருடைய வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறீர்கள். உங்களை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
தற்போது ஷாலினியின் இந்த பதிவுதான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full