துணிவு ரிலீஸ் நெருங்கும் வேலையில் சமூக வலைத்தளத்தில் இணைந்த ஷாலினி அஜித் - அவரின் முதல் பதிவு என்ன தெரியுமா ?

By Arun · 27/11/2022

சமூக வலைத்தளத்தில் ஷாலினி அஜித் முதன் முதலாக போட்ட போஸ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ரேஸ் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

துணிவு படம்:

இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது .இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதோடு சில முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி வர்கீஸ், பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

சோசியல் மீடியாவில் ஷாலினி:

இதனை அடுத்து அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஷாலினி அஜித் முதன் முதலாக போட்ட போஸ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே, ஷாலினி- அஜித் இருவருமே பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்பது அனைவரும் அறிந்து ஒன்று.

ஷாலினி போட்ட முதல் போஸ்ட்:

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அவர்கள் முதல் முதலாக instagram பக்கத்தில் கணக்கு ஒன்றை தொடங்கி இருக்கிறார். இவர் தொடங்கிய சில நாட்களிலேயே 24 ஆயிரம் பாலோயர்ஸ் சேர்ந்துள்ளனர். மேலும், இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அவர்கள் அஜித்துடன் சேர்ந்து திருமண நாளை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல் போஸ்ட் ஆக பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் குவித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இனிவரும் காலங்களில் ஷாலினி அவர்கள் அஜித் உடைய திரைப்படங்களின் அப்டேட் குறித்த தகவல்களை எல்லாம் பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full