தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானது காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான். ஆனால், இவர் கதாநாயகியாக மாறிய பின்னர் இவருக்கு மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

Advertisement

ஆம், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் தான் இவருக்கும் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த படத்தில் நடிகை சித்தாரா நடித்த கேரக்டரில் நடிக்க ஷாலினியை நடிக்க வைப்பது தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் சாய்ஸாக இருந்ததாம். ஆனால், ஷாலினி இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Advertisement

அதேபோல், ‘நீலாம்பரி’ கேரக்டருக்கு முதலில் பிரபல நடிகை மீனாவை நடிக்க வைக்கலாம் என்று தான் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால், வேறு ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனாவை சந்தித்த கே.எஸ். ரவிக்குமார், இதில் வரும் நெகட்டிவ் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று ரஜினியிடம் சொன்னாராம். அதன் பிறகு நடிகை நக்மாவின் பெயர் பரிசீலனையில் இருந்ததாம். பின், தனது தோழியான ரம்யாகிருஷ்ணனை அந்த ‘நீலாம்பரி’ கேரக்டரில் நடிக்க வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

Advertisement
Advertisement