வடிவேலு படத்தில் வரும் காமெடி போல ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன வீடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் இளம் நடிகயானை ஷாலு ஷம்மு. சிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர் தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : ரஜினியும் கமலும் அரசியலில் இணைவார்களாக. கமல் மகள் ஸ்ருதி சொன்ன பதில்.

Advertisement

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அப்போது முதல் இவருக்கு சமூக வளைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்துவிட்டனர். சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் படு கிளாமரான ஆடையில் போட்டோ ஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டார்காமில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், பின்னால் பார்க்காதீர்கள், அந்த வழியில் நீங்கள் செல்லப்போவதில்லை என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார். தற்போது அம்மணி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம். மேலும், பிக்பாஸ் டேனியல், சாம்ஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement