போட்டியில் இருந்து பின் வாங்கிய விஜயகாந்த் மகனின் படைத்தலைவன் - காரணம் என்ன தெரியுமா?
சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தை யாராலும் மறக்க முடியாது. அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். மேலும், கேப்டன் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது.
இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில் இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார். இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சகாப்தம்’. இந்த படத்தில் தான் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். இதனை அடுத்து சண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
படைத்தலைவன் படம்:
பின் சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படம் வரலாறு கதையை மையாக வைத்து எடுக்கப்பட இருந்ததால் விஜயகாந்த் மன்னன் வேடத்தில் நடிப்பதாக இருந்தார். இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கினார்கள். அப்போது விஜயகாந்த்தினுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியாதலும் இந்த படம் நின்று விட்டது. சிறிய இடைவெளிக்கு பின் தற்போது சண்முகபாண்டியன் அவர்கள் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
படம் குறித்த தகவல்:
இந்த படம் கும்கி படத்தை போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். முதலில் இந்தப் படத்தின் கதையை விஜயகாந்த் தான் கேட்டிருக்கிறார். அவர்தான் ‘படைத்தலைவன்’ படத்தை எடுங்கள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம்.
இசைவெளியீட்டு விழா:
தன்னுடைய அப்பாவின் ஆசைக்காகவே இந்த படத்தை ஆக்ரோஷமாக சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். இதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிகுமார், ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரிராஜா ஆகியோருடன் பட குழுவினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=Uj8diLtRujQ
ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு:
இப்படி இருக்கும் நிலையில் சண்முக பாண்டியன் படத்தினுடைய ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக நடிகர் சண்முக பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம். படைத்தலைவன் படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க இருக்கிறோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியிருக்கிறார். அதோடு நாளை ஒரு நாளில் மட்டுமே எட்டு படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.