முதல் படம் வெளியாகும் முன்னரே பாடவும் தெரியும் ஆடவும் தெரியும் என்று நிரூபித்துள்ள அதிதி - வைரல் வீடியோ இதோ.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி பாடகியாக சினிமா உலகில் அறிமுகமாகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த சூழ்நிலையில் தற்போது இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார்.
https://twitter.com/AditiShankarofl/status/1490293079433039872
இவர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது.
விருமன் படம்:
கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்னும் சில மாதங்களில் விருமன் படம் திரைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
https://twitter.com/DeepakReddy376/status/1491128288760446977
அதிதி நடிக்கும் படம்:
இதனிடையே இயக்குனர் சங்கரின் மகள் அதிதிசங்கர் டாக்டர் படிப்பை படித்து முடித்து இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த ஆண்டு தான் அவருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிதி சங்கருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கோகுல் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க இருக்கும் கொரோனா குமார் என்ற படத்திலும் நடிகை அதிதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
தெலுங்கில் பாடி இருக்கும் அதிதி:
இப்படி படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் அதிதி நடித்த படங்கள் திரைக்கு வரும் முன்னே அவர் தற்போது பாடகியாக அறிமுகமாகியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் கிரண் கொர்ரபதி இயக்கத்தில் வருண் தேஜ் நடித்துள்ள படம் ‘கானி’. இந்த படத்தில் ரோமியோ ஜூலியட் என்ற பாடலை அதிதி சங்கர் தான் பாடியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் தான் இந்த பாடல் வெளியானது.
https://www.youtube.com/watch?v=ebmE0ZSB5Ho
மேடையில் நடனமாடிய அதிதி :
இதுகுறித்து பதிவிட்டிருந்த அவர், இது என்னுடைய முதல் பாடல் இது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். என்னுடைய மற்றொரு கனவு நனவாகி விட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த அப்படத்தின் பாடல் வெளியிட்டு சமீபத்தில் நடந்துள்ளது. அதில் அதிதி தான் பாடியுள்ள பாடலை பாடி அசத்தியதோடு நடனமாடி பலரையும் வியப்பில் ஆழத்தியுள்ளார்.