சரத்குமார்-சண்முகபாண்டியன் கூட்டணியில் உருவாகி உள்ள 'கொம்பு சீவி' படத்தின் ட்ரைலர் இதோ

By subhashini · 11/12/2025

கேப்டன் விஜயகாந்தை யாராலும் மறக்க முடியாது. அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். மேலும், கேப்டன் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது.
இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில் இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் தன் உள்ளார்.

இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சகாப்தம்’. இந்த படத்தில் தான் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். இதனை அடுத்து சண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படம் வரலாறு கதையை மையாக வைத்து எடுக்கப்பட இருந்ததால் விஜயகாந்த் மன்னன் வேடத்தில் நடிப்பதாக இருந்தார்.

சண்முக பாண்டியன் குறித்த தகவல்:

இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கினார்கள். அப்போது விஜயகாந்த்தினுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியாதலும் இந்த படம் நின்று விட்டது. சிறிய இடைவெளிக்கு பின் சண்முகபாண்டியன் அவர்கள் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கும்கி படத்தை போல யானை சம்மந்தப்பட்ட படமாக சமீபத்தில் வெளியாகி இருந்தது.

சண்முக பாண்டியன் திரைப்பயணம்:

இந்தப் படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். தன்னுடைய அப்பாவின் ஆசைக்காகவே இந்த படத்தை ஆக்ரோஷமாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

https://www.youtube.com/watch?v=OujknWpXP6k

கொம்பு சீவி படம்:

தற்போது சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொம்பு சீவி. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியிருக்கிறார். நகைச்சுவை கேங்ஸ்டர் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full