மாஸ்க் போடாமல் வெளியில் வந்த விஜய். அதான் அவருக்கு புடிச்சிருந்ததாம் - சாந்தனு பேட்டி.

By Rajkumar · 19/6/2020

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் சாந்தனு அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து உள்ளார்.

வீடியோவில் 3:15 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=sxzzSK5VYcs

இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் விஜய் குறித்து சுவாரசியமான சில விஷயங்களை சமீபத்தில் நடந்த வீடியோ கால் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது,இந்தப் படத்தில் நான் கமிட் ஆனதே எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைசாக இருந்தது இதை என்னால் நம்பவே முடியவில்லை. அடிக்கடி நான் இயக்குனரிடமும் தயாரிப்பாளரிடமும் போன் செய்து நான் இதில் நடிக்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்து கொண்டே இருந்தேன்.

இது என்னுடைய மிகப்பெரிய கனவு என்று கூறிய சாந்தனு, டெல்லியில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார் அதில் டெல்லியில் படப்பிடிப்பு நடந்தபோது எனக்கு முதல் மூன்று நாட்களுக்கு படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தது நான்காவது நாள் எனக்கு 10:00 மணிக்கு ஷூட்டிங் இருந்தது நான் 5:00 மணிக்கு தயாராகி விட்டு மிகவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தேன் ஆனால் விஜய் உடன் நடிக்கும் காட்சி மாலை மூன்று மணிக்கு தான் இருந்தது இருப்பினும் நான் ஐந்து மணிக்கே தயாராகி விட்டேன்.

https://youtu.be/ho8NpQRRU0I

ஒரு முறை நாங்கள் அனைவரும் வால்கிங் போனோம் அப்போது அவர் மாஸ்க் போடாம வந்துட்டாரு. என்னன்னா என்று கேட்டதற்கு, அட போயா எனக்கு இப்படி தான் புடிச்சி இருக்குனு எங்க கூட நடந்து வந்தாரு. திடீல்னு திரும்பி பார்த்தா ஒரு கூட்டத்துல நின்னுட்டு போய் நாம அத பாக்கலாம் வானு கூப்பிட்டு போயிடுவார். அவரு சாதாரண மனுசனா போல சாதாரணமா தான் இருப்பாரு என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full