அன்று தாலி எடுத்து கொடுத்தீங்க, இன்று அப்பாவுக்கு - எமோஷனலாக நடிகர் சாந்தனு போட்ட பதிவு
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு போட்ட நடிகர் சாந்தனு
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். இவருடைய மறைவு செய்திதான் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரையும் பாக்கியராஜ் மறைவு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இவருடைய தனித்துவமான கதையும் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.
முதலில் இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார். இவர் இயக்கிய பல வெற்றி படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும், இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி படங்களையும் இயக்கியும் நடித்திருக்கிறார்.
பாக்கியராஜ் மறைவு:
மேலும், சில தினங்களுக்கு முன் பாக்கியராஜ் காலமாகி இருந்த செய்திதான் சோசியல் மீடியாவில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இவர் வாக்கிங் சென்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்திருந்தார். இவரை குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். சில வாரங்களுக்கு முன்பு தான் இவருடைய குருவான பாரதிராஜா காலமாகி இருந்தார். குருவை தொடர்ந்து சிஷ்யன் பாக்கியராஜ் இறந்திருப்பது தமிழ் திரையுலகை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜய் அஞ்சலி:
அந்த வகையில் முதல்வர் விஜய் அவர்கள் நேரில் சென்று தன்னுடைய இரங்களை தெரிவித்து இருக்கிறார். அதோடு பூர்ணிமா, சாந்தனு ஆகியோருக்கும் தன்னுடைய ஆறுதலை கூறியிருந்தார். அதோடு பாக்யராஜின் மறைவுக்கு முதல்வர் விஜய் அரசு மரியாதை அறிவித்து இருந்தார். மேலும், தன்னுடைய தந்தையின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் நடிகர் சாந்தனு உடைந்து போய் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து நடிகர் சாந்தனு போட்டு இருக்கும் எமோஷனல் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் நடிகர் சாந்தனு, உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
சாந்தனு பதிவு:
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன். அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி அண்ணா என்று கூறி இருக்கிறார்.