ஆபரேஷன் அவ்வளவு சுலபம் இல்லை, பயந்துட்டேன் - சிகிச்சைக்குப் பிறகு தாயகம் திரும்பிய சிவராஜ்குமார் சொன்னது
சிகிச்சைக்குப் பின் நாடு திரும்பிய பிரபல நடிகர் சிவராஜ்குமார் அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் தமிழில் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக, நரசிம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ' கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு ‘தளபதி 69’ திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. கடைசியாக சிவராஜ்குமார் நடிப்பில் ‘பயரதி ரணகல்’ என்னும் கன்னட படம் வெளியானது.
ಒಂದು ತಿಂಗಳ ನಂತರ ಕರುನಾಡ ಚಕ್ರವರ್ತಿ ಡಾ.ಶಿವರಾಜ್ಕುಮಾರ್ ಅವರು ಅಮೇರಿಕಾದಿಂದ ಬೆಂಗಳೂರಿಗೆ ಬಂದಿದ್ದಾರೆ. ಶಿವರಾಜ್ ಕುಮಾರ್ ಅವರು ಕ್ಯಾನ್ಸರ್ ಸರ್ಜರಿಗಾಗಿ ಅಮೆರಿಕೆಗೆ ಹೋಗಿದ್ದು ಮೊನ್ನೆ ಜನವರಿ 24ಕ್ಕೆ ರಾತ್ರಿ ಅಮೇರಿಕಾದಿಂದ ಹೊರಟಿದ್ದ ಶಿವಣ್ಣ ಇಂದು ಬೆಂಗಳೂರು ತಲುಪಿದ್ದಾರೆ.#NamCinema #DrShivanna #Shivarajkumar… pic.twitter.com/PODa0uSC2N
— 𝐍𝐀𝐌𝐂𝐈𝐍𝐄𝐌𝐀 (@NamCinema) January 26, 2025
இந்த படத்தின் பிரமோஷன் பேட்டிகளில், சிவராஜ்குமார் தனக்கு உடல் ரீதியாக பாதிப்பு இருப்பதாகவும், அது குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி அச்சப்படுத்த விரும்பவில்லை என்றும், சிகிச்சைக்காக டிசம்பர் அச்சப்படுத்த அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து அமெரிக்கா சென்ற சிவராஜ்குமாருக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டியூட்டில் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. சிகிச்சைக்குப் பின் புத்தாண்டு அன்று சிவராஜ்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
சிவராஜ்குமார் வெளியிட்ட வீடியோ:
அந்த வீடியோவில் சிவராஜ்குமார், புற்றுநோயிலிருந்து நான் குணமடைய மருத்துவர்கள் எனக்கு பக்க பலமாக இருந்தனர். எனக்கு நடந்த ஆபரேஷன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்ல. என் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு, செயற்கையாக மாற்றப்பட்டது. என்ன ஆப்ரேஷன் நடந்தது என்று சொன்னால் அனைவரும் கவலைப்படுவீர்கள் என்று நினைத்தோம். அதனால்தான் அது பற்றி யாரிடமும் நாங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது நான் மிகவும் நலமாக இருக்கிறேன். மேலும், நான் ஜனவரி மாதம் இறுதியில் இந்தியா வந்து விடுவேன். மார்ச் மாதத்திற்குப் பிறகு முழுமையாக பணிக்கு திரும்புவேன் என்று கூறியிருந்தார்.
தாயகம் திரும்பிய சிவராஜ்குமார்:
இந்நிலையில், குடியரசு தினமான இன்று காலை 9 மணிக்கு அளவில் பெங்களூரு வந்த சிவராஜ்குமாரை அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆப்பிள் மாலை அணிவித்து வரவேற்றனர். திரை உலக பிரபலங்களும் சிவராஜ்குமார் வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது நான் சற்று உணர்ச்சிவசப்பட்டேன். பயமாகவும் இருந்தது. விமானத்தில் பயணிக்கும் போதும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ்குமார்:
வாழ்க்கையில் எது வந்தாலும், அதை எதிர்கொண்டு பயணிப்போம். அறுவை சிகிச்சையின் போது ஆறு மணி நேரம் அனைவருக்கும் பயமாக இருந்தது. அதன்பின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் நான் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். மூன்று நாட்களுக்கு திரவ உணவை மட்டுமே சாப்பிட்டேன். நான் இப்போ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன். எனது வீட்டு பெண்களுக்கு இது மிகவும் கடினமான தருணமாக இருந்தது. எனக்காக நிறைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். பயணத்திலும் அதர்வு கொடுத்தனர்.
https://www.youtube.com/watch?v=ISrTUPUl9dM
மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்:
மேலும், இந்த ஒரு மாதம் எல்லோரும் என்னுடன் தங்கி என்னை கவனித்துக் கொண்டனர். நான் அதிர்ஷ்டசாலி. ராஜா திரும்பி வந்துவிட்டார். எனது 131 ஆவது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் நான் கலந்து கொள்வேன். மேலும், ராம்சரண் படத்திலும் நான் நடிப்பேன் என்று சிவராஜ்குமார் கூறியிருந்தார். அதோட தன்னை வரவேற்க பெங்களூரு விமான நிலையம் வந்தவர்களை கட்டிப்பிடித்து சிவராஜ் குமார் மகிழ்ந்தார். பின், ரசிகர்கள் கொண்டு வந்த மாலைகளை தனது காரில் வைத்து விட்டு சிவராஜ்குமார் தனது வீட்டுக்குச் சென்றார்.