சிவகார்த்திகேயனின் டான் பட ட்ரைலரில் வரும் சிவாங்கியை ரசிகர்கள் வச்சி செய்யும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, இவர் , தொகுப்பாளர், சிங்கர், என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் டாக்டர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து படத்தின் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படம்:

பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது.

Advertisement

டான் படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் சிவா காலேஜ் ஸ்டூடன்டாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, இயக்குனர் கௌதம் வாசுதேவ்,எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், டான் படத்திலும் சிவா ஒரு டூயட் பாடலை எழுதி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் டிரைலர் குறித்து கமெண்டுகளை பதிவிட்டு வந்தார்கள்.

Advertisement

சிவாங்கியை கலாய்க்கும் ரசிகர்கள்:

இந்த நிலையில் ட்ரெய்லரில் சிவாங்கிக் கொடுத்த ரியாக்ஷனை வைத்து நெட்டிசன்கள் பயங்கரமாக வச்சு செய்கிறார்கள். அதிலும் சிலர், என்ன கருமம்டா இந்த ரியாக்சன் என்று சிவாங்கியை பங்கமாக கலாய்க்கும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இதற்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிங்கராக இருந்திருக்கிறார். தற்போது சிவாங்கி சினிமா, சின்னத்திரை என்று படு பிசியாக இருக்கிறார்.

Advertisement