ஷிவாங்கி லூசு, அடுத்ததடவ படத்துல பாத்தேன் ஸ்க்ரீனையே கிழிச்சிடுவேன் - தியேட்டர் வாசலில் திட்டி தீர்த்த ரசிகர்.

By Ajju · 13/5/2022

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

https://twitter.com/chettyrajubhai/status/1524992196402761729

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிவிங்கியின் முதல் படம் :

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்த ஷிவாங்கியை ரசிகர் ஒருவர் திட்டி தீர்த்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ஷிவாங்கி, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை பங்கேற்ற சிவகார்த்திகேயன், ஷிவாங்கியை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் குரலில் மிமிக்ரி செய்தார்.

ட்ரைலரில் கொடுத்த ரியாக்ஷன் :

இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு டான் படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. இது ஷிவாங்கியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஷிவாங்கிக்கு என்று ரசிகர் கூட்டம் இருந்தாலும் அவரை வெறுக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. டான் படத்தின் ட்ரைலர் வெளியான போதே அதில் ஷிவாங்கி கொடுத்த ஒரு ரியாக்ஷனை வைத்து அவரை பலரும் கேலி செய்து இருந்தனர்.

ஷிவாங்கியை திட்டி தீர்த்த ரசிகர் :

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான டான் படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தியேட்டருக்கு வெளியில் விமர்சனம் ஒன்றை கூறி இருந்தார். அப்போது அவரிடம் ஷிவாங்கி குறித்து கேட்கப்பட்டு இருந்தது. ஷிவாங்கி பெயரை சொன்னதும் கடுப்பான அந்த ரசிகர் 'ஷிவாங்கி லூசு, கொரங்கு அந்த பொண்ண அடுத்த தடவ படத்துல பாத்தா ஸ்க்ரீன கிழிச்சிடுவேன். அசிங்க அசிங்கமா கேட்ருவேன்.

பாட சொல்லுங்க நடிக்க வேணாம் :

ஷிவாங்கி கேவலமா இருந்தார், அந்த பொண்ணு நல்லா பாடும் ஆனா, நடிக்க வேனான்னு சொல்லிடுங்க. அந்த பொண்ணு பாடுறது புடிக்கும் ஆனா நடிக்க வேண்டாம் என்று கண்ட மேனிக்கு பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது படு வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட ஷிவாங்கியின் ரசிகர்கள் பலர் அந்த ரசிகர் மீது காண்டாகி இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full