திருமணம் முடிந்த சில மாதத்தில் அடுத்த குட் நியூஸ் அறிவித்த ஸ்ரேயா சித்து. என்ன தெரியுமா?

By subhashini · 4/3/2022

சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அதில் சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் சித்து-ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து -ஸ்ரேயா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். இந்த சீரியல் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் கிளம்பியது. அதோடு சோசியல் மீடியாவில் இவர்களுடைய ஜோடி வீடியோ தான் அதிகமாக வைரல் ஆகி இருந்தது.

அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். தற்போது சித்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் சந்தியாவின் கனவு என்ன என்பதை சரவணன் கண்டுபிடிக்கிறார். இதை நிறைவேற்றுவாரா? இல்லையா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருந்தது.

ஸ்ரேயா-சித்து திரைப்பயணம்:

இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோல் ஸ்ரேயா விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற தொடரில் ஸ்ரேயா நடித்து இருந்தார். கடந்த ஆண்டு தான் அந்த சீரியலும் முடிவடைந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களாக காதல் பறவைகளாக திகழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் தான் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

ஸ்ரேயா-சித்து திருமணம்:

அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், திருமணத்திற்குப் பிறகும் இருவரும் சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். ரிலீஸ் வீடியோ, புகைப்படம் என்று ஏதாவது ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் சேர்ந்து தங்களது காரின் முன்பு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்கள்.

ஸ்ரேயா-சித்து வீட்டில் விசேஷம்:

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி இருந்தார்கள். Morris garage hector என்ற இந்த வகை காரின் விலை 13 லட்சம் இருக்குமாம். இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதத்திலேயே ஸ்ரேயா வீட்டில் அடுத்த குட் நியூஸ் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சித்து- ஸ்ரேயாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் இவர்கள் வீட்டில் புது விசேஷம் வந்திருக்கிறது. எல்லோரும் நினைக்கிற மாதிரி ஸ்ரேயா கர்ப்பமாக இல்லை. ஸ்ரேயாவின் தங்கை பிரியா அஞ்சன் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.

ஸ்ரேயாவின் தங்கை பிரியா திருமணம்:

மேலும், திருமண கோலத்தில் ஸ்ரேயாவின் தங்கை பிரியா அஞ்சன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயா வெளியிட்டிருக்கிறார். மேலும், சில வாரங்களுக்கு முன்பு தான் பிரியா அஞ்சனுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது திருமணம் நடக்க இருக்கிறது. அதில் பிரியா அஞ்சன் தன் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் ஸ்ரேயா-சித்து புகைப்படம் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ரேயாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full