6 ஆண்டுகள் கழித்து பிறந்த மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரேயா கோஷல் - Cute புகைப்படம்.

By Arun · 25/5/2022

தென்னிந்திய மற்றும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான பாடகியாக திகழ்ந்து வரும் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷால், 6 வயதில் இருந்தே இசையை பயிலத் துவங்கினார். ஒரு தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பாடல் பாட பங்கேற்றார் அந்த 16 வயது சிறுமி. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த இயக்குநர் சஞ்சய் லீலா பான்சாலி, இவரின் குரலை கேட்டு வியந்து போனார். பின்னர் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தேவதாஸ் படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்தார் அதிலும் ஸ்ரேயா கோஷல் அறிமுகமான முதல் படத்திலேயே ஐந்து பாடல்களையும் பாடியிருந்தார்.

தமிழ் சினிமா உலகில் உள்ள பின்னணி பாடகர்-- பாடகிகளின் அதிக சம்பளம் வாங்கும் பட்டியல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. பொதுவாகவே சினிமா உலகில் படங்கள் மிகப் பெரிய ஹிட்டாகுவதற்கு நடிகர், நடிகைகளுக்கு இணையாக படத்தின் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதோடு நடிகர், நடிகைகள் மிகப்பெரிய பிரபலமாவதற்கு பாடல்களும் ஒரு முக்கிய பங்கு என்று சொல்லலாம்.பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குவது ஸ்ரேயா கோஷல். ஒரு பாட்டுக்கு மூன்று லட்சத்தில் இருந்து 3.5 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

இதையும் பாருங்க : நீங்க வனிதாவின் மகனா ? வனிதா குறித்த கேள்விக்கு அவரின் மகன் சொன்ன பதில் - இனி வினிதாவுடன் சேர வாய்ப்பே இல்ல போல.

முன்னணி பாடகி :

இவர் 16 வயதிலிருந்து ஹிந்தி படங்களில் பாடிக் கொண்டு வருகிறார்.திரைத்துறையில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வரும் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார் இதுவரை சிறந்த பாடகருக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழில் இவர் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

2015 ல் காதல் திருமணம் :

தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருந்தாலும் குறிப்பாக ஏ ஆர் ரகுமான் இசையில் இவர் பாடிய பாடல்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத பாடல்களாக இருந்து வருகிறது. ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

6 வருடங்கள் கழித்து பிறந்த மகன் :

திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இவர் கடந்த கடந்த ஆண்டு, தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. . மேலும், தனது மகனுக்கு தேவ்யான் முகோபாத்யாயா என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மகனின் முதல் பிறந்தநாள் :

குழந்தை பிறந்த பின் ஸ்ரேயா கோஷல் அடிக்கடி தன் மகனின் புகைப்படத்தை பதிவிடுவது இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஸ்ரேயா கோஷல். அதில் அவரின் மகன் நன்றாக வளர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டாரே என்று ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full