கர்ப்பமாக இருந்ததை இதனால் தான் வெளியில் சொல்லவில்லை - ஸ்ரேயா சொன்ன காரணம்.

By Arun · 15/12/2022

கர்ப்பமாக இருந்ததை வெளியில் சொல்லாமல் மறைத்திருந்த காரணத்தை முதன் முதலாக மனம் திறந்து ஸ்ரேயா சரண் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

மேலும், இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்

ஸ்ரேயா திருமணம்:

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்த ஸ்ரேயாவுக்கு இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின் ஸ்ரேயா திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வெளிநாட்டிலே ஸ்ரேயா செட்டில் ஆனார். மேலும், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஸ்ரேயா சினிமாவில் நடித்து இருந்தார்.

ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது:

அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, தனக்கு குழந்தை பிறந்து இருக்கு என்று திடீரென்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். பொதுவாக பிரபலங்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை படு வித்தியாசமாக அறிவிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் கர்ப்பமான முதல் நாள் தொடங்கி குழந்தை பிறக்கும் வரை விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஸ்ரேயா மகளின் பெயர்:

ஆனால், ஸ்ரேயா கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்தே அறிவித்தார். குழந்தை பிறந்த பின் தன் மகளின் புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். “ராதா சரண் கோஸ்சீவ்“ என்று இவருடைய மகளுக்கு பெயர் வைத்திருக்கிறார். இந்த நிலையில் முதன்முதலாக கர்ப்பமாக இருந்ததை வெளியில் தெரிவிக்காமல் இருந்ததற்கான காரணத்தை மனம் திறந்து ஷ்ரேயா கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் என்னுடைய கர்ப்பத்தை பற்றி பேசாமல் இருந்ததற்கு காரணம் பயம்.

கர்ப்பம் குறித்து சொன்னது:

அதை நான் என்னுடைய நேரமாக மாற்றி அந்த நேரத்தை செலவிட விரும்பினேன். ராதாவுடன் ஆறு மாதங்கள் செலவிட்டேன். அப்போது நான் குண்டாகவும் இருந்தேன். என்னைப் பற்றி யார் என்ன எழுதினாலும் பரவாயில்லை. ஆனால், என் குழந்தையின் மீது கவனம் செலுத்தினேன். இன்னொரு காரணம் என்னவென்றால் என் கர்ப்பத்தை பற்றி நான் பேசினால் எனக்கு வேலை கொடுக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்று பயந்தேன். இது ஒரு விஷுவல் மீடியம். மக்கள் உங்களை இப்படித்தான் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். நான் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து குழந்தை பிறப்பை அறிவிக்கும் போது ஏற்கனவே சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ராதாவுக்கு 9 மாதம் ஆகும் போது நான் எனது உடல் எடையை குறைத்து விட்டேன். அந்த அழுத்தம் எனக்கு இருந்தது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full