இதுவரை எத்தனை பிரேக்கப் ஆகி இருக்கு - லைவில் கேட்டவருக்கு தன் தந்தை ஸ்டைலில் பதிலடி கொடுத்த சுருதி.

By Ajju · 1/1/2022

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

முதல் காதலர்

முதல் படமே கமலுடன்:

தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

ஸ்ருதியின் முதல் காதலர் :

அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை. நடிகை சுருதி ஹாசன், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வந்தனர்.இவர்கள் காதலித்த போது கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன்.

இரண்டாம் காதலர் என்று கூறப்படும் சான்டனு

முதல் காதல் பிரேக் அப் :

காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள சுருதி, கடந்த சில மாதங்களாக சான்டனு ஹசாரிக்கா என்பருடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார். Doodle Art எனப்படும் ஓவிய கலையில் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீப காலமாக இவருடன் தான் ஸ்ருதி இருந்து வருகிறார்.

https://twitter.com/etimes/status/1476766483686383617

பிரேக்கப் குறித்து கேட்டவருக்கு பதிலடி :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதி ஹாசன், அடிக்கடி தன் ரசிகர்களுடன் கேள்வி பதில் சாட்டிங்கில் ஈடு படுவார் அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த போது ரசிகர் ஒருவர், இதுவரை உங்களுக்கு எத்தனை காதல் தோல்வி நடந்து இருக்கிறது என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி 'உனக்கு எத்தனை காதலி இருந்து இருப்பார்கள், நான் நினைக்கிறேன் 0 அல்லது 1\2 இருந்து இருப்பார்கள் ' என்று உனக்கெல்லாம் காதலியே இருக்காது என்பது போல தன் தந்தை ஸ்டைலில் அவரையே நக்கல் செய்து உள்ள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full