தமிழை ஒதுக்கி தெலுங்கில் மட்டும் நடிப்பதற்கு இது தான் காரணம் - மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்
தமிழ் மொழியில் நடிக்காததற்கான காரணம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு' படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தாலும், சமீப காலமாக அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஸ்ருதிஹாசன் திரைப்பயணம்:
கடைசியாக இவர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தில் நடித்து இருந்தார்.
இதை அடுத்து இவர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ருதி அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ருதிஹாசன் பேட்டி:
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத் தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து சொன்னது, நான் எங்க போனாலும் தமிழ் பொண்ணுதான். என்னுடைய வீடு சென்னையில் தான் இருக்கிறது.
தமிழ் படம் பற்றி சொன்னது:
தமிழ் சினிமாவில் நடிக்க வரும் கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. படம் பண்ணனுமே என்ற எண்ணத்தில் நடிக்க முடியாது. படம் பண்ணினால் கதை சூப்பராக இருக்கணும். ஆடியன்ஸ்க்கும் அது பிடிக்க வேண்டும். அப்படி கதை இருந்தால் நான் கண்டிப்பாக நடிக்க தயார். நான் தமிழில் மீண்டும் நடித்த ரொம்ப நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதற்கான வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் குறித்த தகவல்:
மேலும், இதனிடையே ஸ்ருதி லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். அதன் பின் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தான் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றும் கூறி இருந்தார் ஸ்ருதி ஹாசன்.