துப்பாக்கி வில்லனுடன் லிப் லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் ஸ்ருதி ஹாசன் - வீடியோ இதோ.

By Rajkumar · 26/8/2020

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை.மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை. தற்போது மியூசிக் ஆல்பங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

https://www.youtube.com/watch?v=4O4FJypvLrw&feature=emb_title

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இந்தியில் யாரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஜி 5 OTT தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் போன்ற படங்களில் நடித்த வித்யூத் ஜமால் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி இருந்தது அதில் நடிகர் வித்யூத் ஜமாலுடன் மொத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

behindtalkies AMP · Quick view
View full