என் அம்மா-அப்பா விவாகரத்து வாங்கினது சந்தோசம் தான், காரணம் - ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த தகவல்

By subhashini · 10/6/2025

கமல்-சாரிகா பிரிவு குறித்து ஸ்ருதிஹாசன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சுருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார்.

அதோடு சுருதிஹாசன் தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருந்தார் . மேலும், இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை.

சுருதிஹாசன் குறித்த தகவல்:

மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கிடையில் இவர் படங்களில் சிறிய பிரேக் எடுத்து கொண்டார். அதன் பின் சமீப காலமாக சுருதிஹாசன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். தற்போது இவர் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் கூலி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சுருதிஹாசன் பேட்டி:

இதை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்ப இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய தாய், தந்தையின் பிரிவு குறித்து
ஸ்ருதிஹாசன் சொன்னது, நான் சின்ன வயதில் இருக்கும் போது என்னுடைய பெற்றோர்கள் பிரிந்து விட்டார்கள். உண்மையை சொல்ல போனால் அதற்காக நான் வருத்தமாகவே இல்லை. அவர்கள் பிரிந்தது எனக்கு சந்தோஷம் தான். காரணம், இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க முடியாத போது கட்டாயப்படுத்தி ஒரு கூரையின் கீழ் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

விவாகரத்து பற்றி சொன்னது:

அவர்கள் ஒன்றாக வருந்துவதை விட தனித்தனியாக தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே நல்லது என்று நான் நினைத்தேன். இது நான் என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட சுதந்திரப் பாடம். என்னுடைய அம்மா சரிகா விவாகத்திற்கு பிறகு தன்னம்பிக்கையுடன் தைரியமாக நின்று தன்னுடைய வாழ்க்கையை
வாழ போராடினார். அது எனக்கு ரொம்ப உத்வேகம் கொடுத்தது. அந்த சம்பவம் ஒரு பெண் உணர்ச்சி ரீதியாக மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாகவும் தன்னம்பிக்கை பெற்றிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. அது என் வாழ்க்கையில் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மாறியது.

கமல் குடும்பம்:

கமல்ஹாசன், வாணி என்பவரை காதலித்து 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவர் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக வாணி மாறினார். கடைசியில் இவர்களது திருமணம் 1988 விவாகரத்தில் முடிந்தது. பின் 1988 இல் வாணி கணபதியுடன் விவாகரத்து ஆன அதே ஆண்டு கமல்ஹாசன் மற்றும் சரிகா திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சரிகா நடிப்பதை நிறுத்திவிட்டு ஆடை வடிவமைப்பாளராக மாறினார். இவர்களுக்கு சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதன் பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கமல்-சரிகா பிரிந்தார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full