கமல் மகளுக்கு கடவுள் பக்தியா, கோயிலுக்கு திருட்டுத்தனமாக போவாரா? ஸ்ருதிஹாசன் சொன்ன தகவல்

By subhashini · 30/12/2024

கடவுள் நம்பிக்கை பற்றி ஸ்ருதிஹாசன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு' படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ்,
தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், கடைசியாக இவர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தில் நடித்து இருந்தார்.

ஸ்ருதிஹாசன் திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ருதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத் தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன் பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ருதிஹாசன், எனக்கு கடவுள் மேல நம்பிக்கை ரொம்பவே அதிகம். ஆனால், அப்பாவுக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. அதனால் எங்களால் கோவிலுக்கு போக முடியாது. ஆனால், நான் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக தான் கோயிலுக்கு போவேன். அடிக்கடி சர்ச்சுக்கும் போவேன். ரொம்ப நாளைக்கு இது அப்பாவுக்கு தெரியாது. தாத்தா கூட போனாலுமே அப்பாவிடம் சொல்லக்கூடாது என்று சொல்லி தான் தாத்தாவை கூட்டிட்டு போவேன்.

கடவுள் நம்பிக்கை பற்றி சொன்னது:

நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கும், தைரியமாக இருப்பதற்கும் காரணம் கடவுள் மேல உள்ள நம்பிக்கை தான். இது அப்பாவுக்கு பிடிக்காது. எங்க வீடு முழுக்க நாத்திகம் தான். அம்மா கடவுள் பக்தி உள்ளவர்கள். இருந்தாலும், அதை வெளியில் சொல்லக்கூடாது. நான் வளரும் போதே எங்களுக்கு கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆனால், கடவுள் சக்தியை நான் கண்டுபிடித்தேன், புரிந்து கொண்டேன் என்று கூறியிருந்தார்.

ஸ்ருதிஹாசன் குறித்த தகவல்:

மேலும், இதனிடையே ஸ்ருதி லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். அதன் பின் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தான் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றும் கூறி இருந்தார் ஸ்ருதி ஹாசன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full