ராஜ்ய சபாவில் ஒலிக்கட்டும் உங்கள் குரல் - எம்.பியான கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொல்லிய ஸ்ருதிஹாசன்

By subhashini · 26/7/2025

ராஜ்ய சபாவில் கமல்ஹாசன் பதிவி ஏற்றத்தை பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக கமலஹாசன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் சினிமாவை தாண்டி அரசியல்வாதியும் ஆவார்.

இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை 2018 ஆம் ஆண்டு துவங்கி இருக்கிறார். பின் இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் ஆன கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருவரையுமே எதிர்த்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டார். அந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி
2.62% தான் வாக்குகள் பெற்றது. அதோடு அந்த கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் நின்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியும் பெற்றார்.

கமல் அரசியல்:

அதற்குப்பின் 2023 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அணியுடன் கூட்டணி சேர்ந்து வாக்குகளை சேகரித்தார் கமல். அதோடு 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட் வேண்டும் என்று ஒப்பந்தத்துடன் தான் கமலஹாசன் திமுக கூட்டணியில் சேர்ந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது கமலஹாசனுக்கு எம்பி பதவி கிடைத்திருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் எம்பி பதிவு:

தமிழக எம்பிகள் ஆறு பேருடைய பதவிக்காலம் முடிந்தது. திமுக ஆதரவில் இன்று ராஜ்யசபா சபையில் எம்பியாக கமலஹாசன் பதவி ஏற்று இருக்கிறார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உட்பட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் அவர்கள் தன்னுடைய தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் வாழ்த்து:

அதில் அவர், துணிச்சலான புதிய உலகத்தை நோக்கிய உங்களுடைய பயணத்தை இன்றைய நாள் குறிக்கிறது. இன்று ராஜ்ய சபாவில் வலிமையுடனும் உற்சாகத்துடனும் அவையில் ஒலி எதிரொலிக்கும் வகையில் உங்களுக்கே உரிய குரலில் நீங்கள் சத்திய பிரமாணம் செய்ததை பார்த்தது என்றென்றும் என் மனதில் பதிந்த ஒரு தருணமாக இருக்கிறது. எப்போதும் போல நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய வேண்டும். அதை தான் நான் விருப்பப்படுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

கமல் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கமல். கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருந்தார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதை அடுத்து கமல் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full