எனக்கு ரஜினி கூட சேர்ந்து படம் நடிக்கணும் ஆசை கிடையாது, ஆனால் - நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

By subhashini · 12/8/2025

ரஜினி- கமல் பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கூலி படம்:

அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=_zzhmLCW9cQ

படம் குறித்த தகவல்:

அதன் பின் கூலி படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், டைம் ட்ராவல் மையப்படுத்திய கதை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் கூலி படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று இருந்தது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் யாருடைய பேன் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

ஸ்ருதிஹாசன் பேட்டி:

அதற்கு சுருதிஹாசன், எப்போதுமே அப்பா தான் எனக்கு நம்பர் ஒன். அப்பாவை எப்போதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போது நான் ரஜினி சார் ரசிகை. இதுதான் என்னுடைய பேலன்ஸ். ரஜினி சாரை முதன்முதலில் பார்த்தபோது பவர் ஹவுஸ் மாதிரி இருந்தது. அப்படி ஒரு எனர்ஜி அவரிடம் இருக்கும். என் வாழ்க்கையில் ரஜினி சாருடன் சேர்ந்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று நான் நினைத்ததே கிடையாது.

ரஜினி பற்றி சொன்னது:

அதை பற்றி நான் யோசித்ததும் கிடையாது. லோகேஷ் கனகராஜ் என்னிடம் இந்த படம் தொடர்பாக வந்து பேசும் போது கனவு போல தான் இருந்தது. ரஜினிகாந்த் தவிர நாகார்ஜுனா சார், அமீர்கான் சார், உபேந்திரா சார், சத்யராஜ், சௌபின் சார் என எல்லோருமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். உண்மையிலேயே ஒரு நடிகையாக இந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு சிறந்த தருணம் ஆகவும், அனுபவமாகவும் இருந்தது. நிறைய விஷயங்களை இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full