பேசாம இவங்க தமிழ் பிக் பாஸுக்கு வந்து இருக்கலாம் - இந்தி பிக் பாஸில் செம VIBE செய்யும் ஸ்ருதிக்கா

By Rajkumar · 9/10/2024

நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் செமயாக வைப் செய்யும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று‌. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் தான் முதன் முதலாக ஒளி பரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பழமொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் வாரம் ஜாலியாக இருக்கும். சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால், இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு ட்விஸ்ட்களுடன் எட்டாவது சீசன் ஆரம்பம் ஆகியுள்ளது. அதேபோல் சமீபத்தில் ஹிந்தியில் பிக் பாஸ் 18 தொடங்கி இருக்கிறது.

பிக் பாஸ் ஹிந்தி:

இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த 'ஸ்ரீ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பின் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஸ்ருத்திகா குறித்து:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டிலை வென்றார். அதற்குப் பிறகு இவர் தனியாக youtube சேனலை துவங்கி இருக்கிறார். இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா கலந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருத்திகா:

இதன் மூலம் ஹிந்தியில் முதல் முதலாக கலந்து கொள்ளும் தமிழ் பெண் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும் குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே ஸ்ருத்திகா தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார். சல்மான் கான் இடம் தமிழில் வணக்கம் சொல்லுமாறு இவர் கேட்க, சல்மான் கானும் தமிழில் வணக்கம் சொல்லி அரங்கையே அதிர வைத்தார். தற்போது யார் இந்த ஸ்ருத்திகா என ஹிந்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யும் அளவு இவர் மாறியுள்ளார்.

வைப் செய்யும் ஸ்ருத்திகா:

இந்நிலையில் நேற்று எபிசோடில் பிக் பாஸ் இவரிடம், என்ன செய்றீங்க என்ன ஹிந்தியில் கேட்டதற்கு,'சும்மா தான் இருப்போம்' என்ன தமிழில் பதில் சொல்லி பிக் பாஸுக்கே ஷாக் கொடுத்தார். அதேபோல் தன் கணவர் குறித்து பேசும்போது, எங்கள் திருமண நாள் ஜனவரி 26 ரிபப்ளிக் தினத்தன்று தான். அன்றோடு அவரின் ஃப்ரீடம் போயிடுச்சு. ஆனா, எனக்கு ஃப்ரீடம் கெடச்சிடுச்சு என்று கூறி என்றவாறு பிக் பாஸ் வீட்டையே ஒரு பைப்பில் வைத்திருக்கிறார் ஸ்ருத்திகா. தற்போது இவரின் வீடியோக்கள் வைரலாகி வருவதால், ஹிந்தி பிக் பாஸ் சீசன் மீது தமிழ் ரசிகர்களின் கவனமும் திரும்பியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full