சொந்த ஊரிலேயே நடிகர் சிபிராஜ் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா, கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சிபிராஜும் ஒருவர். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சத்யராஜ்.

இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், சத்யராஜின் மகன் தான் சிபிராஜ். இவர் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தலாம் எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான லீ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்திருந்தது.

Advertisement

இந்த திரைப்படத்தின் மூலம் சத்தியராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதோடு நடிகர் சிபிராஜ் அவரது தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் இருவரும் மாஸ் காட்டி உள்ளார்கள். மேலும், சிபிராஜ் பல படங்களில் நடித்து இருந்தாலும் தன் தந்தையை போல் சினிமாவில் பிரபலமாகவில்லை. இருந்தும் விடாமல் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாயோன்.

சிபிராஜ் குடும்பம்:

இந்த படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் சிபிராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் மென்பொறியாளர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

Advertisement

சிபிராஜ் மகன்:

இதில் சிபிராஜ் மகன் தீரன் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலையை கற்றுவருகிறார். மேலும், தீரன் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டாபோட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement

சிபிராஜ் புது வீடு:

இந்த நிலையில் சிபிராஜ் தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் பண்ணை வீடு கட்டி இருக்கிறார். தற்போது அந்த வீட்டில் குடும்பத்துடன் கிரகப்பிரவேசம் செய்து இருக்கிறார். இதில் சத்யராஜ் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள். மேலும், சிபிராஜின் புது வீடு புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .

Advertisement