'அந்த கொழந்தையே நீங்க தான்' தன்னுடைய சிறுவயது புகைப்படத்திற்கு வந்த மீம் குறித்து சிபிராஜ்ஜின் ரியாக்ஷன்.

By Rajkumar · 27/3/2021

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் சிபிராஜும் ஒருவர். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சத்யராஜின் மகன் சிபிராஜ், சிபிராஜ் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தலாம் எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான லீ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் சத்தியராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.நடிகர் சிபிராஜ் அவரது தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் இருவரும் மாஸ் காட்டி உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து நடிகர் சிபிராஜ் அவர்கள் கட்டப்பாவ காணோம் என்ற படத்தில் நடித்து உள்ளார். ஆனால்,இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் தன் தந்தையை போல் சினிமாவில் பிரபலமாகவில்லை.

இதையும் பாருங்க : சன் டிவியாவது பரவாயில்ல 'மாஸ்டர் செஃப்' தான் காப்பி அடிச்சாங்க - இந்த சேனல் அப்படியே குக்கு வித் கோமாளிய காப்பி அடிச்சிடாங்க - ப்ரோமோ இதோ.

இப்படி ஒரு நிலையில் இவர் கௌண்டமணியுடன் இருக்கும் இவரது குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் சமீபத்தில் வைரலானது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஒரு சில காமெடி நடிகர்கள் மட்டும்தான் ஹீரோவுடன் சேர்ந்து செய்யும் காமெடிகளில் வெற்றி அடைவார்கள். அந்த வகையில் சத்யராஜ் - கவுண்டமணி ஜோடியின் காமெடி இன்றளவும் மறக்க முடியாது. இவர்கள் இருவருமே இணைந்து நடித்த பல்வேறு படங்களின் காமெடிகள் மாபெரும் வெற்றியடைந்தது.

https://twitter.com/Sibi_Sathyaraj/status/1375311085213917186

சினிமாவையும் தாண்டி இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் தான். இப்படி ஒரு நிலையில் சிபி ராஜ், கௌண்டமணியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக, சத்தியராஜ் நடித்த மகா நடிகன் படத்தில் வரும் 'அந்த கொழந்தையே நீங்க தான் சார்' என்ற வசனத்தை போட்டு மீம் ஒன்று வைரலானது. இதனை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full