தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

கருப்பு பணம் விவகாரத்தில் இருந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரை மத்திய மற்றும் மாநில அரசு என எந்தத் தரப்பையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தார். அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்தும் ட்வீட் செய்து இருந்தார் சித்தார்த். இப்படி ஒரு நிலையில் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் நடுத்தர மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ள பெட்ரோல் விலை குறித்து நிர்மலா சீத்தா ராமன் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு கேலி செய்துள்ளார்.

Advertisement

இந்தியாவில் கடந்த மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை பலரும் கண்டித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெட்ரோல் விலை குறித்து 2013 ஆம் ஆண்டும் தற்போதும் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் நிர்மலா சீதாராமன், 2013-ல் பேசிய வீடியோவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் யூனியன் அரசு தான் என்று பேசியுள்ளார்.

ஆனால், தற்போது பேசிய வீடியோவில் பெட்ரோல், டீசல் விலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள சித்தார்த், மாமியின் நம்பிக்கையில் வளைந்துகொடுப்பதில் வேற லெவல் என்று கேலியாக பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நான் 5 முறை ஹேக் செய்யப்பட்டுள்ளேன். எனது ட்வீட்டுகள் தடைசெய்யப்பட்டு மறைக்கப்படுகின்றன. பின்தொடர்பவர்கள் எனது ட்வீட் எதையும் பார்க்க முடியாது என்று புகார் கூறுகிறார்கள், அவர்கள் தானாகவே பின்பற்றப்படவில்லை.

Advertisement

எனது ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 மாதங்களில் மாறவில்லை. ஏதோ நிச்சயமாக முடக்கப்பட்டுள்ளது!. என்ன நடக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவை கண்ட பலரும், அவர் சொன்னது போல அவருடைய ட்வீட்கள் காண்பிக்கப்படுவது இல்லை என்று கமன்ட் செய்து வருகின்றனர். அதிலும் பலர் நடிகர் சித்தார்த், அடிக்கடி பிஜேபி குறித்தும் மோடி குறித்தும் ட்வீட் செய்து வருவதால் தான் இப்படி உங்கள் கணக்கு முடுக்கப்படுகிறது என்றும் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement