சித்தார்த்-அதிதி ராவ் திருமணம் எங்கு? எப்போது? தெரியுமா- வெளியான அதிரடி அப்டேட்

By subhashini · 2/9/2024

சித்தார்த்- அதிதி ராவ் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த 'சித்தா' படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சமூக வளைத்தளத்திலும் ட்ரெண்டிங்கான நபர் தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார். அதிலும் இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

அதிதி ராவ் குறித்த தகவல்:

இது குறித்து இவர் மீது பல விமர்சனங்கள் வந்து இருக்கிறது. இதனிடையே இவர் மணிரத்னம் பட நடிகை அதிதி ராவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அதிதி ராவ். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இவர் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

சித்தார்த் – அதிதி ராவ் காதல்:

அதன் பின் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக சித்தார்த்- அதிதி ராவ் இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்கள். அதோடு அடிக்கடி இருவரும் டேட்டிங் சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்து வந்தனர்.

View this post on Instagram

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

நிச்சயதார்தம் :

அப்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால், இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகவோ, காதலிப்பதாகவோ குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மேலும், சமீபத்தில் தான் இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டதாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்கள். இதில் இருவரும் தங்களுடைய நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் புகைப்படம் இருந்தது. ஆனால், இவர்களுடைய திருமணத்தை குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

சித்தார்த்-அதிதி திருமணம் குறித்த அப்டேட்:

இந்த நிலையில் சித்தார்த்-அதிதி திருமணம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, நடிகை அதிதியின் உடைய பெற்றோர் அந்த காலத்தில் ஹைதராபாத் மாநிலத்தின் பிரபு குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதிதி உடைய முன்னோர்கள் வனர்பதி ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள். அதனால் சித்தார்த் மற்றும் அதிதி உடைய திருமணம் அவர்களுடைய முன்னோர்களால் கட்டப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு பழமையான வனர்பதி கோயிலில் தான் நடக்கும் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவிலேயே இது தொடர்பான அறிவிப்பை இருவருமே அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full