2கே கிட்ஸ்களுக்கு தான் இந்த உலகமா? இந்தியன் 2 பட விமர்சனம் - சித்தார்த் கொடுத்த பதிலடி

By subhashini · 27/11/2024

இந்தியன் 2 படம் குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் சித்தார்த் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருந்தார். இதை அடுத்து கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் நடித்து இருந்தார்.

சித்தார்த் குறித்த தகவல்:

இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்தார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசைஅமைத்திருந்தார். மேலும், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

இந்தியன் 2 படம்:

சங்கர் திரைப்பயணதிலேயே இந்த படம் பெரும் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. அதோடு யாரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம் என்று #IndianDisaster ஹேஸ் டேகை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். மேலும், இந்த படத்தினுடைய பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பாடி இருந்தது மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு இருந்தது. அதோடு படம் வெளியான பிறகு 'சித்ரா அரவிந்தன் சோசியல் மீடியா' என்று சித்தார்த் பேசிய வசனம் தான் சர்ச்சையாகி இருந்தது.

சித்தார்த் அளித்த பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சித்தார்த், 2கே கிட்ஸ்கள் எல்லாமே இந்த உலகமே 2000க்கு பிறகு தான் தொடங்கியது என்று நினைக்கிறார்கள். வேலையில்லாதவன் ஏதாவது நெகட்டிவாக சொல்லிட்டு தான் இருப்பான். சித்தா படம் பலருக்குமே பிடித்தது. ஆனால், சித்தா படத்தில் திட்டுபவர்கள் இருக்கிறார்கள். 10 பேர் இருந்தால் அதில் கொஞ்சம் பேர் திட்ட தான் செய்வாங்க. அதை ஏன் காது கொடுத்து கேட்டுட்டு இருக்கணும் என்று கூறியிருக்கிறார்.

மிஸ் யூ படம்:

தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ் யூ. இந்த படத்தை செவன் மைல் பெர் செகண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா பாலசரவணன், பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்குனர் N. ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full