திருமணத்திற்குப் பிறகு மீண்டும் சீரியலில் இணையும் சித்து-ஸ்ரேயா, என்ன சீரியல் தெரியுமா?
பிரபல ஜோடி சித்து மற்றும் ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சீரியல் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஃபேவரட்டாக சீரியல் விளங்குகிறது. மேலும், சீரியல் மட்டும் இல்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மக்களின் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அதில் சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்தவர்கள் சித்து- ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'திருமணம்' என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அதே தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.
சித்து- ஸ்ரேயா காதல்:
ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகளும், கருத்துக்களும் எழுந்து இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் அதற்கு மௌனம் சாதித்திருந்தனர். சீரியல் மூலம் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதோட சோசியல் மீடியாவில் இவர்களுடைய ஜோடி புகைப்படங்கள் தான் அதிகமாக வைரல் ஆகி இருந்தது. அதற்குப் பிறகுதான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=47dCJ5AIjM0
சித்து- ஸ்ரேயா திருமணம்:
அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக காதல் பறவைகளாக வலம் வந்த இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதைப் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
சித்து- ஸ்ரேயா திரைப்பயணம்:
மேலும், நடிகர் சித்து 'திருமணம்' சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஆலியா மானசா நடித்திருந்தார். அதே போல் நடிகை ஸ்ரேயாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்புடன் குஷி' என்னும் சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'ரஜினி என்னும் சீரியலிலும் ஸ்ரேயா நடித்திருந்தார். இவர்கள் நடித்த அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வள்ளியின் வேலன்:
இந்நிலையில், ஜீ தமிழில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் 'வள்ளியின் வேலன்' என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. திருமணத்திற்குப் பிறகு சித்து-ஸ்ரேயா மீண்டும் இணைந்து இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாக துணையாக நிற்கும் வேலனின் கதை தான் இந்த வள்ளியின் வேலன். இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சித்து-ஸ்ரேயா மீண்டும் இணைந்து சீரியலில் நடிப்பது அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.