சில்க் ஸ்மிதாவுக்கு மகன் இருக்கிறாரா? அவரின் கடைசி கடிதத்தில் எழுதி இருந்தது என்ன தெரியுமா?

By subhashini · 3/12/2024

சில்க் ஸ்மிதா எழுதியிருந்த தற்கொலை கடிதம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் சில்க். மாவரைக்க வந்த போது சில்க் ஸ்மிதாவை பார்த்த வினுச்சக்ரவர்த்தி வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் தான் நடித்தார்.

இதனால் தான் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது. இதனை தொடர்ந்து ஸ்மிதா சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் கவர்ச்சிக்கு பெயர் போனாலும் நடிப்பு, நடனம் என பல திறமைகளை காட்டியவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து சில ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருந்தார். பின் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார்.

சில்க் ஸ்மிதா தற்கொலை:

இதனால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார். இன்றும் சில்க் ஸ்மிதாவின் மரணம் மர்மமாகவே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதா தற்கொலை தான் செய்து கொண்டார் என்று போலீசார் உறுதிப்படுத்தி இருந்தார்கள். காரணம், இவர் இறப்பதற்கு முன்பு தற்கொலை கடிதம் ஒன்று எழுதி இருந்தார்.
இந்நிலையில் அதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

சில்க் சுமிதா தற்கொலை கடிதம்:

அதில், ஒரு அவலை பெண் என்று ஆரம்பித்து கடவுளே, என் ஏழு வயதிலிருந்தே வயிற்று பிழைப்புக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்தமானவர்கள் என்று யாருமே இல்லை. நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். பாபுவை தவிர என் மீது யாருக்கும் அன்பு இல்லை. பாபுவை தவிர மற்ற அனைவரும் என் கஷ்டத்தை சாப்பிட்டவர்கள் தான். என் பணத்தை சாப்பிட்டவர்கள் தான். எனக்கு மன அமைதியை இல்லாமல் செய்தார்கள். அனைவருக்கும் நன்மையை தான் நான் செய்தேன். ஆனால், எனக்கு கெடுதல் மட்டுமே நடந்தது.

பாபு குறித்த தகவல்:

என் சொத்தில் உள்ள அனைத்தையும் பாபுவின் குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் பங்கிட வேண்டும். என் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். கடவுள் இருந்தால் அவரைப் பார்த்துக் கொள்வார். தினமும் இதனால் ஏற்படும் சித்திரவதையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ராமு, ராதாகிருஷ்ணன் என்னை ரொம்பவே துன்புறுத்தி இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்தேன். ஆனால், அவர்கள் எனக்கு துரோகம் தான் செய்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாக சொன்னார். ஆனால், தரவில்லை. பாபு தவிர என் உழைப்பை சாப்பிடாதவர் யாருமே இல்லை. இதை எழுதுவதற்கு நான் எவ்வளவு நரக வேதனை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

சில்க் திருமணம்:

வாழ்க்கையில் பல மரணம் தான் நிரந்தரம் என்று தோன்றுகிறது என்று ரொம்ப எமோஷனலாக எழுதி இருந்தார். தற்போது அந்த கடிதம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, அதில் அவர் குறிப்பிட்ட பாபு யார்? என்பது தெரியவில்லை. ஒரு வேளை பாபு இவருடைய மகனாக இருப்பாரா? இல்லை வளர்த்த பிள்ளையா? என்பதை பற்றிய விவரமும் தெரியவில்லை. சில்க் அவர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு திருமணம் செய்து இருந்தார். ஆனால், இவருடைய கணவர் ரொம்ப கொடுமைப்படுத்தியதால் தான் அந்த வாழ்க்கையே வேண்டாம் என்று சென்னைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full