அடுத்த பஞ்சாயத்தில் இறங்கிய சிம்பு. கைவிடப்பட்ட திரைப்படம் மீண்டும் தொடக்கம்.

By Rajkumar · 18/6/2020

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சிம்பு. சோசியல் மீடியாவில் எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அது நம்ம சிம்பு தான். தன்னுடைய சிறு வயதிலேயே சினிமா துறைக்குள் நுழைந்து தற்போது பிரபலமான நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். இவர் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்சனை சமரசம் செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்திற்கு பிறகு சிம்பு அவர்கள் கன்னட படமான முஃப்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்பு - கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் துவங்கிய நிலையில் சிம்பு - ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து சிம்பு அவர்கள் ஹன்சிகாவுடன் மஹா என்ற படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட படமான முஃப்தி படம் ரீமேக்கை மீண்டும் துவங்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் சிம்பு - ஞானவேல் ராஜா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சரியான பிறகு படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால் சிம்பு மாநாடு படத்தில் இருந்து விலகினார். மீண்டும் இவர் மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Tamil Behind Talkies AMP · Quick view
View full