எஸ்.டி.ஆர்.49 அப்டேட் : சந்தானத்துடன் நடிக்க சிம்பு போட்ட கண்டிஷன், இயக்குனர் சொன்ன விஷயம்

By subhashini · 5/5/2025

சிம்பு படத்தில் சந்தானம் நடிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். சமீப காலமாக இவர் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிம்பு-கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்தில் சிம்பு நடிக்கிறார்.

சிம்பு 49 படம்:

இதை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் சிம்பு நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கம் 51 வது படத்திலும் சிம்பு கமிட் ஆகி இருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சிம்புவின் 49 வது படம் குறித்து அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் காலேஜ் பின்னணியில் gen z கொண்டாடும் வகையில் உருவாக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விண்டேஜ் எஸ்டிஆரின் அனைத்து மேனரிசங்களுடன் கமர்சியல் ஆக்சன் படமாக முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு வைத்த நிபந்தனை:

இந்த படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கையாளர்கள் இந்த படத்தில் கயாடு நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜையும் நடந்திருக்கிறது. ஜூன் இரண்டாம் வாரத்தில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஹீரோவாக கலக்கும் சந்தானம் சிம்புவுடன் இந்த படத்தில் இணைந்திருப்பது பலருக்குமே ஆச்சரியம்தான். இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவிடம் கதை சொல்லும் போது, உங்களுடன் சந்தானம் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார்.

சந்தானம் பேட்டி:

உடனே சிம்பு சந்தானம் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரை என்னுடன் நடிக்க கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பார். ஆனால், அதே சமயம் என்னுடைய படத்தில் அவருடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நானே அவரை கூப்பிடுவேன் என்று நிபந்தனையோடு தான் சந்தானத்தை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். சந்தானத்தின் உடைய கதாபாத்திரம் அவருடைய ஹீரோ இமேஜ் எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் இயக்குனர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் சந்தானம், ஒரு நாள் சிம்பு எனக்கு போன் செய்து படம் ஒன்னு பண்ணுறேன். அதில் நீங்களும் நடிக்கணும் என்று கேட்டார். அவர் கேட்டா எஸ் தான்.

View this post on Instagram

A post shared by Tamil Buzz Dubai (@tamilbuzzdubai)

படத்தில் நடிக்க காரணம்:

அதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியாது. அந்த இடத்தில் தான் அவரை வைத்திருக்கிறேன். சிம்பு எப்போது கேட்டாலும் நோ சொல்ல மாட்டேன். அவருக்கு ஒன்லி எஸ் தான். ஆரம்பத்தில் இருந்து அவருக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய படத்திற்கு கேட்ட சமயத்தில் நானும் அடுத்தடுத்து ஒரு படம் தொடங்குவதற்கான வேலைகளில் எல்லாம் மும்முரமாக இருந்தேன். பின் தயாரிப்பில் இடம் சாரி கேட்டு, இப்ப சிம்பு படத்துக்கு வந்து விட்டேன். எங்களுடைய அதிரடியை எதிர்பாருங்கள் என்று புன்னகையுடன் கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full