தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெண் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சிம்பு இவர் சினிமாவில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பல்வேறு பிரச்சினைகளையும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் .நடிகர் சிம்பு ஆரம்பத்தில் ரஜினி மகளை காதலித்து வந்தார். அதன் பின்னர் அந்த காதல் நயன்தாரா ,ஹன்சிகா என்று மாறிக் கொண்டே போனது. இதனால் வெறுப்படைந்த என்று இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிலர் ரத்தினகிரி முருகன் கோவிலில் வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டது அங்கு வருவோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கையில் சிம்பு படத்தை வைத்துக் கொண்டு மனதில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வைத்துக் கொண்டு மண்டியிட்டு படியேறிச் சென்று முருகனை தரிசித்தனர் சிம்புவின் தீவிர ரசிகர்கள்.

Advertisement

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிம்பு ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். மச்சி மதன் வேறு யாரும் இல்லை. சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் போது விஸ்வாசம் பட போஸ்டரை கிழிப்பேன் என்று கூறி பின்னர் அஜித் ரசிகர்களிடம் ஊமை குத்து வாங்கி மன்னிப்பு வீடியோ போட்டவர் தான்.

பிரார்த்தனைக்கு முன்னதாக சாலையோரங்களில் ஆதரவின்றி தவித்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர் சிம்பு ரசிகர்கள். ரசிகர்களின் வேண்டுதல் பலித்து சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். நடிகர் சிம்புவிற்கு இலக்கியா என்று சகோதரியும், குறளரசன் என்ற தம்பியும் இருக்கிறார்கள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். அவர்கள் இருவருக்குமே திருமணம் முடிந்து விட்டது.

Advertisement

டி ராஜேந்திரன் இளைய மகளும் சிம்புவின் சகோதரருமானா குறளரசன் காதலித்து வந்த நபீலா அஹமத் என்பவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர்கள் இருவரும் வரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். டி ராஜேந்தர் அளித்த பேட்டியில் ‘அனைவரும் என் மகன் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.கண்டிப்பாக சிம்பு நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார். மேலும், சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் அவருக்கு திருமணம் செய்து வைப்போம் கடவுள் புண்ணியத்தில் அது நிச்சயம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறி இருந்தார்.

Advertisement
Advertisement