சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு. வைரலாகும் புகைப்படம். ஆனால், 48 நாள் விரதத்தை முடித்தாரா ?

By Rajkumar · 10/12/2019

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றபட்டத்துடன் திகழ்ந்து வரும் சிம்பு கடந்த சில காலமாகவே தனது சினிமா வாழ்க்கையிலும், சொந்த வாழக்கையில் பெரும் சறுக்கல்களை சந்தித்து வந்தார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து சிம்புவிற்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க செவந்த வானம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அதன் பின்னர் வந்த வந்தா ராஜாவா தான் வருவேன் படம் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. இருப்பினும் அந்த படத்திற்கு பின்னர் சிம்புவிற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், வழக்கம் போல அந்த பட வாய்ப்புகளையும் தானே கெடுத்துக்கொண்டார் சிம்பு. இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் குறித்து ஓராண்டு காலமாகவே சர்ச்சையில் வந்தது. அது மட்டும் இல்லாமல் திடீரென்று சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடிக்க மாட்டேன் என்றும்விலகினார். பின் வெங்கட்பிரபுவும் வேறு ஒரு படத்தில் பிசியாக இருந்து வந்தார். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் படத்தின் வேலைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் சிம்புவின் கால்ஷிட்க்காக காத்திருந்தார். ஆனால், சிம்புவோ மற்றொரு படத்தில் பிஸியாகவும், வெளிநாடு பயணம் என சுற்றி கொண்டு இருந்தார் என்றும் தெரிய வந்தது.

இதனால் சுரேஷ் காமாட்சி அவர்கள் கோபமடைந்து வேறொரு நடிகரை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அது மட்டுமில்லாமல் பல பிரச்சனைகள் எழுந்து தற்போது தான் புயல் அடித்து ஓய்ந்தது போல மாநாடு பிரச்சனை தீர்வுக்கு வந்து உள்ளது. மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பின் திடீரென்று சிம்பு அவர்கள் ஐயப்ப சாமி கோயிலுக்கு மாலை போடுவதாக தகவல் வந்தது. மலைக்கு போயிட்டு வருவதற்குள் மாநாடு பாடவேளைகள் முடித்து விடலாம் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக விரதமிருந்து கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தார் நடிகர் சிம்பு.

ஆனால், மாலை போட்ட பின்பு பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடுவது, ஷூ, கண்ணாடி அணிந்து கொள்வது என்று படு மாடர்ன் சாமியாராக தான் சுற்றிவந்தார் சிம்பு. இந்த நிலையில் நடிகர் சிம்பு நேற்றுடன் தனது விரதத்தை முடித்துவிட்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், சிம்பு என்றால் சர்ச்சை இல்லாமலா இருக்கும் ? இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உண்மையில் 48 நாள் விரதத்தை முடித்தாரா? சிம்பு கடந்த மாதம் தானே மாலை போட்டார் அதற்குள்ள ஒரு மண்டலம் முடிந்துவிட்டது என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full