குண்டாக இருந்த போது சிம்பு ஒரு நாளைக்கு இத்தனை பிரியாணி சாப்பிடுவாராம் - ஏன் அப்புறம் உடம்பு ஏறாது.

By Rajkumar · 2/11/2020

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது 'லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு' தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து வந்தார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இது ஒருபுறம் இருக்க நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சிம்புவின் உடல் எடை குறைந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். இந்த நிலையில் சிம்புவின் இந்த மாற்றம் குறித்து அவரது நண்பரும் நடிகருமான மஹத், மற்றும் சிம்புவின் ஜிம் கோச் பேட்டி அளித்துள்னனர். சொல்லப்போனால் மஹத்தின் உடலை பார்த்து தான் சிம்பு , மஹத்தின் பயிற்சியாளர் சந்தீப் என்பவரை சந்தித்து உள்ளார்.

இதுகுறித்து பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் அளித்த பேட்டியில், சிம்புவுக்கு பயிற்சி கொடுத்தது சற்று வித்தியாசமான அனுபவம். மற்றவர்கள் போல ஒரே பயிற்சியை அவர் திரும்ப திரும்ப செய்ய விரும்பவில்லை. அதனால் அவருக்கு நான் விதவிதமான பயிற்சிகளை கொடுத்தேன். காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து நடைபயிற்சி செய்வார். பின்னர் ஜிம்மில் வொர்க்கவுட். இவை தவிர்த்து அவரின் உடல்வலிமை அதிகரிக்க பிரேத்யக பயிற்சியும் கொடுக்கப்பட்டது. வாரத்தில் 4 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட சிம்பு தற்போது 5 நாட்கள் பயிற்சி செய்கிறார். இவைத் தவிர்த்து அவர் விளையாடுவதிலும் கவனம் செலுத்தினார்.ஊரடங்கால் அவரின் எடை அதிகரித்து விட்டது. அதன் பின்னர் ஜீன் மாதம் மீண்டும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். கடினமாக பயிற்சி செய்து தற்போது 71.1 கிலோ எடை கொண்ட சிம்புவாக மாறி நிற்கிறார் என்று கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=9SQrWVUr-og&feature=emb_title

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிம்புவின் பயிற்சியாளர், சிம்பு மிகவும் உணவு பிரியர் அப்படிப்பட்ட சிம்பு புதிய டயட்டை அட்ஜஸ்ட் செய்ய மிகவும் கஷ்டப்பட்டார். சிம்பு மிகவும் நன்றாக சமைப்பார் ஒரு நாளைக்கு மட்டும் 5 பிரியாணி சாப்பிடுவார். ஆனால், இதையெல்லாம் தாண்டி அவர் தனது கடின முயற்சியால் இப்படி மாறி இருக்கிறார். இதை அவருக்காக பண்ணவில்லை. தன்னுடைய ரசிகர்களுக்காக தான் செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கும் ரசிகர்களுக்காக நான் இதை செய்தே ஆகவேண்டும் என்று கூறினார் என்று சந்தீப் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full