விண்ணைத்தாண்டி வருவாயா 15 years: 'இப்போலாம் ஜெஸ்ஸி சொல்லல வேற சொல்லுது' - சிம்பு வெளியிட்ட வீடியோ
சிம்பு-விடிவி கணேசனின் ஃபன் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இருந்தது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
சிம்பு திரைப்பயணம்:
இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தொடர்பாக சிம்பு வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா படம்:
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் திரிஷா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனால் படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகள், பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள்.
#15yearsofVTV 🤍💙 pic.twitter.com/ElyfgVNtfm
— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2025
சிம்பு வீடியோ:
இந்த நிலையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிம்பு - கணேஷ் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்கள். அதில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு இப்போது மக்கள் கொடுத்து வரும் ஆதரவை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் ரிலீஸானது போதே சூப்பர்ஹிட் கொடுத்தீர்கள். மீண்டும் ரிலீஸான போதும் ஆயிரம் நாட்களைக் கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு மேஜிக்கல் படம்.
சிம்பு சொன்ன விஷயம்:
உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் சார், ஏ ஆர் ரகுமான் சார், திரிஷா மேடம் உட்பட எங்க பட குழு அனைவருக்குமே நன்றி என்று பேசி இருக்கிறார். அதற்குப்பின் விடிவி கணேஷ், சிம்புவை பார்த்து 'இங்கு என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸின்னு சொல்லுதா' என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிம்பு, இப்போ எல்லாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லல வேற சொல்லுது என்று ஜாலியாக கூறி இருக்கிறார்.