இப்போ சினிமாவில் காமெடி குறைந்து விட்டது, சந்தானத்தை ரொம்ப மிஸ் பண்றோம் - நடிகர் சிம்பு ஓபன் டாக்

By subhashini · 6/5/2025

சிம்பு பற்றி நடிகர் சந்தானம் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமடைந்தவர். அதோடு சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான். தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார்.

காமெடியனாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சந்தானம் சமீப காலமாக கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருக்கவேண்டிய இப்படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமலே இருந்தது. இந்த படம் பொங்கலுக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள்.

டிடி நெக்ஸ்ட் லெவல்:

இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய படத்தில் சந்தானத்துடன் இணைந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். குறிப்பாக, இந்த படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தார்கள். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்க படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் சந்தானம் அண்ட் கோவுடன் கௌதமேனன், செல்வராகவன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 16-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=QzF5ilGS_fc

படவிழாவில் சிம்பு:

இதில் கலந்துகொண்ட சிம்பு, சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1, 2 படங்களை எல்லாம் நான் பார்த்து ரொம்ப ரசித்திருக்கிறேன். அவர் நண்பன் என்பதை தாண்டி நான் சந்தானத்தின் உடைய மிகப்பெரிய ரசிகன். அப்படித்தான் அவருடைய படங்களையும் பார்ப்பேன். படம் பார்க்கும்போது எங்களுக்குள் இருக்கிற நட்பையெல்லாம் ஓரமாக வைத்து விடுவேன். அதேபோல் ஆர்யாவும் என்னுடைய நண்பர். தயாரிப்பாளராக ஆர்யாவுக்கு இந்த படம் வெற்றியாக அமைய வேண்டும். அன்றிலிருந்து இன்று வரைக்கும் சந்தானத்தின் உழைப்பு அப்படியே தான் இருக்கிறது. இந்த படத்தில் எங்கள் இயக்குனர் கௌதம் மேனன் சாரை இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை.

https://www.youtube.com/watch?v=6CH89Gv97vU

சந்தானம் பற்றி சொன்னது:

அந்த ஒரு விஷயத்தில் மட்டும் சும்மா விடமாட்டேன். மேலும், சந்தானத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். என்னிடம் பலரும், சந்தானம் பேசுற அத்தனை நிகழ்வுகளிலும் பேட்டிகளிலும் உங்களைப் பற்றி பேசி விடுகிறார். அது எப்படி என்று கேட்பார்கள். அதுதான் சந்தானம். அதுதான் அவருடைய குணம். ஒருவருக்கு நீங்கள் பல சமயங்களில் உதவி பண்ணலாம். அந்த உதவியை எதிர்பார்க்காமல் பண்ணுங்கள். சிலர் நம்ம பண்ணும் உதவியை நினைவில் வைத்து மரியாதை கொடுப்பார்கள். சிலருக்கு அந்த மரியாதை கொடுக்காமல் கடந்து போகலாம். ஆனால், நீங்க இதுதான் நான். எனக்கு உதவி பண்றதுக்கு பிடிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கணும்.

படங்கள் பற்றி சொன்னது:

அந்த எண்ணம் கொண்டவர் தான் சந்தானம். இந்த நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் சந்தானத்துக்கு நெக்ஸ்ட் லெவலாக இருக்கும். மீண்டும் நாங்கள் இணைந்திருக்கிறோம். இப்போ சினிமாவில் காமெடி குறைந்திருக்கிறது. ரொம்ப சீரியசான படங்கள் எடுக்கிறோம். நாங்கள் பண்ண பெரும்பாலான படங்கள் ஆக்சன் படமாக தான் இருக்கு. ஜாலியான, சாப்டான படங்களும் வரணும். சந்தானம் மாதிரியான ஒரு நபரை நாம் ரொம்ப மிஸ் பண்ணறோம். ஹீரோவை தாண்டி என்னுடன், ஆர்யா கூட, அவருக்கு பிடித்த இயக்குனர்களோடு அவர் வேலை பார்க்க வேண்டும் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன். அதுக்கு ஒரு ஆரம்பமாக என்னுடைய 49 ஆவது படம் இருக்கும். நிறைய பேர் அவர் பண்ணுவாரா? என்று கேட்டார்கள். நான் ஒரு போன் பண்ணினாலே அவர் கண்டிப்பாக வந்து விடுவார். எங்களுக்குள் இருக்கிற நட்பு அந்த மாதிரி என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full