எல்லாரும் 42,000ரூபா டி-ஷர்ட்ல சீன் போட்டா, தலைவன் சிம்பு Balmain ஜீன்ஸ் வாங்கி போட்டு மாஸ் காமிச்சிட்டாரு - விலை எவ்ளோனு கேட்டா ஆடி போவீங்க.

By Sathya · 23/3/2022

பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி கோலிவுட் நட்சத்திரங்கள் வரை என ஏராளமானோருக்கு பிடித்த பேவரட் டி-ஷர்ட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் அணியும் ஆடைகள் ரசிகர்கள் மத்தியில் அதிக மோகத்தை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் அணியும் டீசர்ட் முதல் ஹேர் ஸ்டைல் வரை என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனால் நடிகர், நடிகைகள் அணியும் ஆடைகள், பொருட்கள் எல்லாம் சில சமயங்களில் மார்க்கெட்டிங் டிமான்டும், ட்ரெண்டிங்கும் ஆகிறது.

அதனாலேயே பல பொருள்களின் உரிமையாளர்கள் நடிகர் நடிகைகளை வைத்து தங்களின் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் ஆடை முதல் உபயோக பொருட்கள் வரை என அனைத்தும் எளிதாக ரீச் அடைகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீப காலமாக பல பிரபலங்கள் விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை என பல பிரபலங்களின் டீ சர்ட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Balmain டீ-சர்ட் பற்றிய தகவல்:

அது என்னவென்றால், தற்போது திரைப்பிரபலங்கள் விரும்பி அணியும் ஆடையாக Balmain என்ற டீ-சர்ட் உள்ளது. தற்போது இது தான் பயங்கர டிரெண்டிங்கில் உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

Balmain டீ சர்ட் அணியும் பிரபலங்கள்:

இந்த Balmain டீ சர்டின் விலை 557 டாலர். அதாவது இந்திய மதிப்பில் 45000 ரூபாய். மேலும், இந்த டீ-சர்ட்டை சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் இந்திய சினிமா உலகில் பல பிரபலங்களின் பிராண்ட் ஆகவும் இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுன், கோலிவுட்டில் சிம்பு, விக்னேஷ் சிவன், தனுஷ் என ஏராளமான நடிகர்களின் பேவரட்டாக உள்ளது. அப்படி என்ன இந்த டீசரில் ஸ்பெஷல் என்றால், அதனை தயாரிக்கும் Balmain என்கிற நிறுவனம் தான்.

Balmain நிறுவனம் பற்றிய தகவல்:

இந்த நிறுவனம் பாரிசை மையமாகக் கொண்டது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ஆடைகள், ஜாக்கெட்டுகள், அணிகலன்கள் எல்லாமே தரமானதாக முன்னிலை வகிக்கிறது. மேலும், Balmain ஆடைகள் இத்தாலி, சீனா, ஜப்பான், பல்கேரியா, போர்ச்சுகல், போலந்து ஆகிய நாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. இதை பிற நாடுகளில் இறக்குமதி செய்கின்றனர். நல்ல தரமான ஸ்டைலிஷான ஆடையாக இருப்பதால் இதை இந்திய சினிமா உலக பிரபலங்கள் விரும்பி அணிந்து வருகிறார்கள்.

சிம்புவின் Balmain Jeans :

இப்படி பிரபலங்கள் பலரும் Blamaint டீ ஷர்ட்டில் வளம் வந்து கொண்டு இருக்க, தற்போது சிம்பு மட்டும் Balmain pantயை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். சரி, டீ ஷர்ட் விலையே அவ்ளோ இருக்கே அப்போ pant எவ்ளோ இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. உண்மையில் இந்த Balmain Pant-ன் விலை எவ்ளோ தெரியுமா ? $2,246 அதாவது இந்திய மதிப்பில் 1,70,976 ரூபாயாம். அதுவும் இதற்கு tax வேறு தனி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full