மஹா மாநாடு என்ற மேஹா பட்ஜெட் படத்தை அறிவித்த சிம்பு.! பங்கம் செய்யும் ரசிகர்கள் காரணம் இது தான்.!

By Rajkumar · 14/8/2019

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்றும் சர்ச்சைக்கு குறைவில்லாத ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் ',மாநாடு' படத்தில் நடித்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சிம்பு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநாடு படம் இல்லை என்றால் என்ன சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மகா மாநாடு என்ற தலைப்பில் சிம்பு ஹீரோவாக படம் நடிக்கிறாராம். இந்த படத்தை அவரது தந்தை டி.ஆர் இயக்குகிறார் என்றும் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பாருங்க : கலைமாமணி விருது வென்ற சரவணன்.! சின்மயி பதிவிட்ட கருத்து.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! 

மேலும், இந்த படத்திற்கு ரூ.125 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாகவும், ஐந்து மொழிகளில் இப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்பு இதுவரை நடித்த படங்களில் இந்த படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்தவுடன் பாராட்டை விட ட்ரோல் தான் அதிகம் குவிந்து வருகிறது.

இதற்க்கு முன்பாகவே, சிம்பு ஒரு படத்தை அறிவிப்பு ஒன்றை அறிவித்திருந்தார். அதில் பாடல் இல்லை, இடைவேளை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் மஹா மாநாடு படமும் அதே போல வெறும் வாய் ஜ்வடலாக தான் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கிழித்தெடுத்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full