சிம்புவுக்கு பெண் பார்த்து வைத்திருந்த டிஆர் - நடிகையுடன் லிவிங் டு கெதர் கிசுகிசுவால் நின்றுபோன திருமணம்?

By subhashini · 13/1/2022

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இருந்தாலும் சிம்பு என்றாலே சர்ச்சை மன்னன் என்று சினிமா துறையில் சொல்லும் அளவிற்கு பல பிரச்சினைகள் கிளம்பி இருக்கிறது. தற்போது தான் அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால், அவர் அமைதியாக இருந்தாலும் இந்த சர்ச்சைகள் அவரை விடாமல் துரத்துகின்றன.

ஏதாவது ஒரு பிரச்சினையில் எப்படியாவது சிம்புவின் பெயர் வந்துவிடுகிறது. இருந்தும் சிம்பு அதை கண்டு கொள்ளாமல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை நிதி அகர்வால் உடன் சிம்பு லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும் சமீபத்தில் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. நிதி அகர்வால்- சிம்பு இருவரும் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

நிதி அகர்வால் உடன் சிம்பு:

இதற்கு முன் நிதி அகர்வால் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஈஸ்வரன் படத்திற்கு பிறகு தான் நிதி அகர்வால் உடன் சிம்பு லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம்போல சிம்பு இதைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பொதுவாகவே சோசியல் மீடியாவில் சிம்பு உடைய செய்தி வந்தாலே போதும் அதை காட்டு தீ போல பரப்பி விடுவார்கள். அப்படித்தான் நிதி அகர்வால்- சிம்பு உடைய செய்தி சோஷியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் பரவியிருந்தது.

சிம்புவுக்கு பார்த்த பெண்:

அதிலும் புதுமுக நடிகைகள் சினிமாவில் அறிமுகமானாலே அவர்களையும் சிம்புவையும் வைத்து ஏதாவது ஒரு சர்ச்சை வந்துவிடும். இதில் நிதி அகர்வால் மட்டும் என்ன விதிவிலக்கா? இப்படி இருக்கும் நிலையில் சிம்புவுக்கு டிஆர் மற்றும் அவருடைய அம்மா உஷா இருவரும் சில ஆண்டுகளாகவே பெண் பார்த்து வருகிறார்கள். அப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து பெங்களூரில் ஒரு பெண் பார்த்து இருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று நிச்சயதார்த்தமும் விரைவில் நடப்பதாக இருந்தது என்று கூறப்பட்டது. தற்போது நிதி அகர்வால் உடன் சிம்பு உறவில் இருப்பதாக சோசியல் மீடியாவில் உலா வந்த செய்திகளால் சம்பந்தமே வேண்டாமென்று பெண் வீட்டில் சொல்லி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் நின்ற சிம்பு திருமணம்:

இதனால் டிஆர் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. டிஆர், சிம்பு இருவரும் வாயை திறந்தால் மட்டும் தான் இதற்கான பதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

சிம்பு நடிக்கும் படம்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும், மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு அவர்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் சில தினங்களுக்கு முன் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ஐசரி கணேஷ் வழங்கினார். அதற்கான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full