இதான் தாய் மாமன் பாசம் - தனது தங்கை மகன் பிறந்தநாளுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்

By Rajkumar · 21/7/2024

தன்னுடைய தங்கை மகனுக்கு நடிகர் சிம்பு கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகருமான டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகி விட்டது.

View this post on Instagram

A post shared by ELAKKIYA TR (@elakkiya_tr)

இதில் சிம்பு தங்கை இலக்கியாவிற்கு திருமணமாகி ஏற்கனவே அபி ஜேசன் என்கிற ஆண் குழந்தை இருக்கிறது. பின் கடந்த ஆண்டு தான் சிம்புவின் தங்கைக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய தங்கை மகனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுத்திருக்கிறார்.

சிம்பு மருமகன் பிறந்தநாள்:

அவர் ஆச்சரியப்படும் அளவிற்கு பரிசு மேல் பரிசு அடுக்கி அவரை ஆனந்தத்தில் சிம்பு திக்குமுக்காட வைத்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும், தாய்மாமன் என்றால் சும்மாவா! சிம்பு தூள் கிளப்பி விட்டார் என்று வீடியோவுக்கு லைக்ஸ் குவித்தும் அவருடைய மருமகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.

https://www.youtube.com/shorts/CXMHnKTO6Lg

சிம்பு திரைப்பயணம்:

மேலும், சிம்பு அவர்கள் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து இருந்தார்.

சிம்பு கம்பேக்:

பிறகு 'ஈஸ்வர்' படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும், சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த சிம்பு நடித்த 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

சிம்பு நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து இருந்தார் சிம்பு. தற்போது கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக் லைப்' படத்தில் சிம்பு நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதை அடுத்து சிம்பு அவர்கள் இன்னும் சில படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full