சிம்புவின் 47படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது.அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதிலும் சிம்புவிற்கு விண்ணை தாண்டி வருவாயா படம் மூலம் ஒரு பெரிய திருப்பு முனையை கொடுத்தார்.

இப்படி ஒரு நிலையில் ‘str47’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது GVM – STR கூட்டணி. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கௌதம் மேனன் பிறந்தநாளில் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அப்போது  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’  என்று தான் டைட்டில் வைத்தனர். ஆனால், இந்த டைட்டில் கொஞ்சம் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது.

இதையும் பாருங்க : இந்த சார்பட்டா நடிகர் என்னுடைய மாணவர் தான் – ஆரி சொன்ன செம சர்ப்ரைஸ் தகவல்.

Advertisement

இதனால் இந்த படத்தின் டைட்டிலை ‘வெந்து தணிந்த காடு’ என்று மாற்றி நேற்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சிம்பு தானாம். அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2 ‘ படம் எடுக்க திட்டமிடபட்டிருந்தது. அந்த படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்க இருந்தது.

ஆனால், அந்த திரைப்படத்தின் பணிகள் துவங்குவதற்குள் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் உருவாக திட்டமிடபட்டுவிட்டது. அது தான்  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. இப்படி ஒரு கெளதம் மேனனிடம் தனுஷின் ‘அசுரன்’ போல கனமான கதைக்களம் கொண்ட படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்.

Advertisement

இதனால் ஜெயமோகனின் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையை படமாக்கும் உரிமையை வாங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டார் கெளதம் மேனன். அந்த படம் தான் இந்த ‘வெந்து தணிந்த காடு’. இப்படி ஒரு நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தை திட்டமிட்டு இருந்த  ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு படம் பண்ணுவதாக பேசிவிட்டு, இப்போது இந்தக் கூட்டணி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ணுகிறார்கள் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்

Advertisement

இது ஒருபுறம் இருக்க ‘AAA’ படத்தின் நஷ்ட ஈட்டை சிம்பு கொடுக்கவேண்டும். அதை கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்கிறார்” என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதனால் இந்த ‘வெந்து தணிந்த காடு’ படத்திற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஃபெப்ஸி அமைப்பு மற்றும் ஐசரி கணேஷ் ஆதரவால் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஃபெப்ஸி ஊழியர்களின் மகன், மகள்களுக்கு ஐசரி கணேஷ் தனது கல்லூரியில் வருடத்திற்கு 40 சீட்களை இலவசமாக வழங்கியிருக்கிறார். அதனால் தான் ஃபெப்ஸி அமைப்பு இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறதாம்.

Advertisement