தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்பவர் சாமி. இவர் சிந்து சமவெளி, உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் அக்கா குருவி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜாவே மூன்று பாடல்களை இசையமைத்து இருக்கிறார். மேலும், 1997-ஆம் ஆண்டு மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் 1998 ஆம் ஹிட் ஆஸ்கர் விருது விழாவில் அந்த ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படத்தின் பிரிவிலும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இப்படி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தப் படத்தை அக்கா குருவி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சாமி அவர்கள் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவரது திரைப் பயணம் குறித்து கூறியிருப்பது, நான் என்ஜினியரிங் படித்து இருக்கேன். 1990களில் சினிமாவுக்காக வந்தேன். ஆனால், 1995 இல் தான் சினிமாவுக்குள் நுழைய முடிந்தது. பார்த்திபன் சார், சேரன் சார், எஸ் ஏ சந்திரசேகரன் என பல பேரிடம் உதவி இயக்குனராக இருந்தேன்.

Advertisement

இயக்குனர் சாமி அளித்த பேட்டி:

பத்து வருடங்கள் அப்படியே என் வாழ்க்கை ஓடி விட்டது. 2005இல் தான் உயிர் என்ற படம் பண்ணினேன். அதற்கு பிறகு அடுத்தடுத்து ராக்கெட் வேகத்தில் படங்கள் இயக்கி இருந்தேன். இதற்கிடையே மூன்று படங்கள் ட்ராப் ஆகி விட்டது. சிந்து சமவெளி படம் தான் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆனது. பாகுபலி மாதிரி ஒரு சிலம்பத்தை மையமாக வைத்து ஒரு டாக்குமென்டரி படம் பண்ணினேன். 11 ரீலுக்கு பிறகு படம் வரவில்லை. அந்த படம் வந்திருந்தால் என்னுடைய கேரியர் மாறி இருக்கும். அதன் பிறகு பணப் பிரச்சனை ஏற்பட்டது. என்னுடைய தினமும் வேளை ஸ்கிரிப்ட் எழுதுவது தான். இப்பவும் என் அலமாரியில் 150 ஸ்கிரிப்ட் இருக்கு.

சிந்துசமவெளி படம்:

ஒரு தயாரிப்பாளர் கிட்ட போகும் போது உங்க பட்ஜெட் என்ன? எந்த மாதிரி கதை எதிர்பார்க்கிறார்கள்? என்று கேட்டு அதுக்கேத்த மாதிரி நாலு கதை சொல்லுவேன். உங்களுக்கு கான்ட்ரவர்சி தான் நல்லா வரும். அப்படி ஒரு கதை சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள். அப்பத்தான் எனக்கு ரஷ்யன் எழுத்தாளர் இவான் துர்கனேவ் எழுதிய `ஃபர்ஸ்ட் லவ்’ நாவல் நினைவுக்கு வந்தது. 1880 இல் வெளிவந்த புக். அதை மையமாக வைத்து தான் சிந்துசமவெளி படத்தை பண்ணினேன். இங்கே ஆண்கள் தப்பு பண்ணினால் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால். ஒரு பெண் விரும்பிப் போய் செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பு என்கிறார்கள்.

Advertisement

சிந்து சமவெளி படத்தின் போது நிகழ்ந்தது:

ஆனால், படம் வந்த பிறகு சமூக ஆர்வலர்கள் பலர் தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டு பெண்கள் பார்க்க கூடாது என்று சொல்கிறார்கள். அந்த நேரத்தில் என் வீட்டில் குழந்தை பிறந்திருந்தது. என் வீட்டை தேடி வந்து கல்லெறிந்தார்கள். அதன் பிறகு சொந்த ஊருக்கு திரும்பினேன். மேலும், சினிமாவில் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று கங்காரு என்ற படத்தை பண்ணினேன். பிறகு தான் என்னுடைய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அக்காக் குருவி படத்தை எடுக்க ஆரம்பித்தோம். என்னுடைய முந்தைய படம் கங்காரு இன்னொருத்தர் கதைதான்.

Advertisement

அக்கா குருவி பட உரிமை:

கதை இருந்தால் இயக்குவது எளிது. இரண்டு லட்சம் பணம் கொடுத்து வாங்கினேன். அக்காக் குருவி வாங்க மஜித் மஜிதி மெயில் அனுப்பினேன். இந்த படத்தை முன்னாடி இந்தியில் எழுதி இருந்ததால் மும்பைக்குப் போய் கேட்டேன். அவர்கள் அதிக விலை சொன்னார்கள். அப்புறம் பேரம்பேசி விலையைக் குறைத்து முறைப்படி ஜிஎஸ்டி செலுத்தி இந்த கதையை வாங்கினேன். ஒருத்தர் உழைப்பை திருடக்கூடாது, அது அசிங்கம், கேவலமான வேலை. அதை நான் செய்யவே மாட்டேன். நான் ரைட்ஸ் வாங்கி பண்ணறதை பார்த்து வெற்றிமாறன் சார் கூட பாராட்டி இருந்தார் என்று கூறி இருந்தார்.

Advertisement