வடிவேலுவுக்கு நட்பைக் களங்கப்படுத்தத்தான் தெரியும்- வடிவேலு குறித்து சிங்கமுத்து. அவருக்கு செய்த அட் வைஸ்.

By Manikandan · 28/12/2022

தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையான பாடி லாங்குவேஜின் மூலம் உயந்த பல நடிகர்கள் உள்ளனர். அப்படி திறமை மிக்க காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிங்கமுத்து. இவரை போல வைகை புயல் வடிவேலு என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவின் முதன்மையான காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு. இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கமுத்து நில மோசடி செய்து விட்டதாக நிதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார் நடிகர் வடிவேலு. அந்த புகார் இன்றும் முடிக்கப்படாமல் நிலுவையில் தான் உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிங்கமுத்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் வடிவேலுவுடனான சண்டை பற்றியும் தன்னுடைய மகன் பற்றியும் சில விஷியங்களை பகிர்ந்து கொண்டார். அதில் நீதிமன்ற வழக்கை பற்றி கேட்ட போது `அந்த வழக்கு வாய்தாவாக வாய்தாவாக வாங்கி இன்னமும் முடியாமல் இருந்து வருகிறது. ஒருமுறை நான் அந்த வழக்கின் போது வேண்டுமென்றே அவரின் பக்கத்தில் சென்று அமர்தேன். அப்போது அவர் என்னுடன் நேருக்கு நேராக சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் சொல்லவில்லை. ஏனென்றால் வடிவேலு சொன்னது பொய் என்று அவருக்கே தெரியும்.

இது என்னுடைய மகன் கதாநாயகனாக வந்துவிட்டான் அவருடைய மகன் கதாநாயகனாக வரவில்லை என்ற வயிற்றெரிச்சல். படம் கிடைக்கவில்லை என்றால் தன்னுடைய பணத்தை போட்டு படம் எடுக்க வேண்டியதுதானே. ஆனால் அது முதலில் மக்களுக்கு பிடிக்க வேண்டும். அதற்கான முயற்சியைத்தான் செய்ய வேண்டும். அதை தவிர்த்து மற்றவர்களை பொறாமை பட கூடாது என்று கூறிய அவரிடம் நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

https://www.youtube.com/watch?v=UlBp-TSAmnY

அதற்கு சிரித்துக்கொண்டே நான் நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் பார்க்க வில்லை அனால் படம் பார்பதவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. வடிவேலு அந்த படத்தில காமெடியன்கள் எல்லாம் இதோட முடித்தார்கள் என்று சொன்னார். எனக்கு இந்த படம் வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தெரிந்து விட்டது இந்த படம் ஓடாது என்று. படத்தில் ஒருவர் மட்டும் காமெடி செய்தால் படம் ஓடாது. உதாரணமாக பத்து பேர் சேர்ந்து தேர் இழுத்தால்தான் தேர் பிரச்சனை இல்லாமல் நகரும் ஒருவர் மட்டும் இழுத்தால் இடையில் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என்று கூறினார் சிங்கமுத்து.

மீண்டும் வடிவேலுடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு எல்லாரும் பொழைக்குறக்காக ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. அது அவர்களுடைய குணம் இப்போதெல்லாம் பல பேர் பல விதமாக பேசுகிறார்கள். வடிவேலு சும்மாவே இருந்திருக்கலாம், புலி வருது புலி வருதுன்னு கடைசியில் அவரே வீட்டிற்குள் சென்று விட்டார். வடிவேலு மனசு வீடக் கூடாது, இந்த படம் இல்லைனா மற்ற படங்களில் நடித்து அடுத்த படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். முயற்ச்சி செய்து நடி ஒரு நண்பனாக சொல்கிறேன். ஆனால் நட்பை களங்கப்படுத்திய உனக்கு எப்படி தெரியும் என்று அந்த பெட்டியில் கூறியிருந்தார் காமெடி நடிகர் சிங்கமுத்து.

Tamil Behind Talkies AMP · Quick view
View full